மேலும் அறிய

Thangamani DVAC Raid: கிரிப்டோவில் தங்கமணி முதலீடு செய்ய காரணம் என்ன? ஆதாரங்கள் எங்கு இருக்கும்?

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவரும் நிலையில், அவர் கிரிப்டோகரன்சியில் பல கோடி சொத்துக்களை முதலீடு செய்துள்ளதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவரும் நிலையில், அவர் கிரிப்டோகரன்சியில் பல கோடி சொத்துக்களை முதலீடு செய்துள்ளதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டில் 69 இடங்களில் தங்கமணி தொடர்புடைய இடங்களில் தற்போது சோதனை நடந்து வருகிறது. கடந்த ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக தங்கமணி செயல்பட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாக இருந்தவரும், அவரின் இடது கரமாக பார்க்கப்பட்டவருமான தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் தற்போது ரெய்டு நடந்து வருகிறது. முறைகேடாக சொத்து சேர்த்ததாகவும், கிரிப்டோகரென்சியில் முதலீடு செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. அது தொடர்பான விசாரணையில் தங்கமணி 4.68 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி சாந்தி, மகன் தரணி தரன் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எப்ஐஆரில் 2வது குற்றவாளியாக மனைவி சாந்தியின் பெயரும் 3வது குற்றவாளியாக மகன் தரணி தரன் பெயரும் இடம்பெற்றுள்ளன. இவர்களுக்கு வருமானம் வருவதற்கான வழிகள் இல்லாத நிலையிலும் கடந்த 5 வருடங்களில் அவர்களின் பெயரில் சொத்துக்கள் சேர்ந்து இருக்கின்றன. 

மேலும் கிரிப்டோ கரன்சியில் தங்கமணி பல கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பணங்களை அப்படியே விலை உயர்ந்த கிரிப்டோகரன்சிகளை வாங்கி முதலீடு செய்துள்ளார். இதற்கான கணினி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். 

Continuing Anti-corruption Raid On AIADMK Ex-ministers | ரெய்டில் சிக்கும்  5வது மாஜி அமைச்சர் தங்கமணி: ஜூலை டூ டிசம்பர்... தொடரு மாதம் ஒரு மந்திரி  ஆபரேஷன்!

கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்ஸி வர்த்தகம் உலகம் முழுவதும் பிரபலமாகிவருகிறது. இந்தியாவிலும் சமீப காலமாக கிரிப்டோ வர்த்தகம் சூடுபிடித்துவருகிறது. கிரிப்டோ கரன்சிகளுக்கு முறையான அங்கீகாரம் அரசினாலோ, ரிசர்வ் வங்கியினாலோ வழங்கப்படாத சூழலில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை நெறிமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

வரும் குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி குறித்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Thangamani DVAC Raid: கிரிப்டோவில் தங்கமணி முதலீடு செய்ய காரணம் என்ன? ஆதாரங்கள் எங்கு இருக்கும்?

கிரிப்டோகரன்சி என்பது ஒரு நாணயத்தின் டிஜிட்டல் வடிவமாகும். இது, நாணயம் அல்லது நோட்டு போன்ற தொட்டு உணரும் வடிவத்தில் உங்கள் கையில் இருக்காது. இது முழுவதும் இணையத்தில் இருக்கும். எந்த சட்டவிதிகளும் இல்லாமல் இதன் மூலம் வர்த்தகம் செய்யப்படுகிறது. எத்தனை இந்தியர்கள் கிரிப்டோகரன்சியை வைத்திருக்கிறார்கள் அல்லது எத்தனை பேர் அதில் வர்த்தகம் செய்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் எதுவும் இல்லை, ஆனால் கோடிக்கணக்கான மக்கள் டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்வதாகவும், தொற்றுநோய் காலகட்டத்தில் இது அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிட்காயின், டாக்காயின் போன்ற பல வகை கிரிப்டோ கரன்சிகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை மத்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனினும் அமெரிக்க, சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் கிரிப்டோகரன்சி அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. 

கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் தளத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற உதவும் பணமாக செயல்படுகிறது. ஒரு சில நிறுவனங்கள் தங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணமாக கிரிப்டோகரன்சியை பெற்று கொள்ள சம்மதித்துள்ளனர். இந்த கரன்சியை ஒரு பங்குகளை போல் நீங்கள் மற்றவர்களிடம் விற்க மற்றும் வாங்கவும் முடியும். கிரிப்டோகரன்சிகளை முதலில் டாலர் கொண்டு வாங்க முடியும். குறிப்பாக பிட்காயின் கரன்சியை டாலர் வைத்து வாங்கலாம். இதர கிரிப்டோ கரன்சிகளை பிட்காயின் வைத்து வாங்கலாம். முதலில் கிரிப்டோ கரன்சி வாங்க இணையத்தில் வாலெட் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். 

கிரிப்டோ கரன்சி பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் வாயிலாக செயல்படுகிறது.  கிரிப்டோ கரன்சியின் ஒவ்வொரு பரிவர்த்தனைகளும் ஒரு பொது ரிஜிஸ்டரில் பதிவுசெய்யப்படும். ஒரு கிரிப்டோ கரன்சி உருவாக்கப்பட்டால், அத்துடன் சேர்ந்து நௌன்ஸ், கிரிப்டோ ஹஸ் உள்ளிட்டவையும் சேர்த்து உருவாக்கப்படும். இவை ஒவ்வொரு கிரிப்டோ கரன்சியுடனும் இருக்கும். இது பொது ரிஜிஸ்டரை பயன்படுத்துவதால் இதில் அதிக வெளிப்படைத்தன்மை உள்ளது. 

பிட்காயின் கரன்சியை எதிர்காலத்தில் இருக்க போகும் முக்கியமான க்ரிப்டோகரன்சியாக பல நாட்டினர் கருதுகின்றனர். அதனால் அதன் விலை மதிப்பு அதிகரிப்பதற்குள் பலர் தற்போது வாங்கி அடுக்கிக்கொண்டு வருகின்றனர். இந்த விதமான கரன்சியில் எந்த நாட்டின் ரிசர்வ் வங்கியும் தலையிடாது என்பதால் இதன் மதிப்பை பணவீக்கம் வந்தால் குறைக்கமுடியாது. இது பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் மிகவும் பாதுகாப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்று கருதுகின்றனர். கிரிப்டோகரன்சி எந்தவித வட்டியும் இல்லாமல் மதிப்பு உயர்வதால் அதனை பிற்காலத்தில் ஒரு பெரிய கரன்சியாக மக்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று கருதி சிலர் வாங்குகின்றனர். 

கிரிப்டோகரன்சி பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக ஒன்றாக இருந்தாலும் இதன் சந்தை மதிப்பு மிகவும் மோசமானது. ஏனென்றால் திடீரென உயரும் மதிப்பு அதைவிட வேகமாக குறையும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget