மேலும் அறிய
Advertisement
Kalabhavan Haneef: மலையாளத் திரையுலகில் அதிர்ச்சி.. பிரபல நடிகர் கலாபவன் ஹனீஃப் காலமானார்!
பிரபல மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கலாபவன் ஹனீஃப் உயிரிழந்தார்.
Kalabhavan Haneef Passes Away: பிரபல மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கலாபவன் ஹனீஃப் சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் கலாபவன் ஹனீஃப். 63 வயதான இவர் இன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். சுவாசக்கோளாறு இருந்ததன் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி கலாபவன் ஹனீஃப் உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஹனீஃப், சிறுவயதில் இருந்தே மிமிக்ரி செய்வதில் ஆர்வமாக இருந்தார். இதனால் மலையாளத் திரையுலகில் தனது பயணத்தை மிமிக்ரி கலைஞராக தான் தொடங்கியுள்ளார். பின்னர் திரையில் நடிகராக வலம் வந்த கலாபவன் ஹனீஃப் 150 படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களின் பட்டாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து பாண்டிப்படா, சோட்டா மும்பை, உஸ்தாத் ஹோட்டல், த்ரிஷ்யம், அண்மையில் ஆஸ்கருக்கு தேர்வான 2018 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மறைந்த கலாபவன் ஹனீஃபிற்கு வாஹீதா என்ற மனைவியும், ஷரூக் மற்றும் சிதாரா என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் மறைந்த ஹனீஃபாவிற்கு மலையாள திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கலாபவன் ஹனோஃபின் மரணத்திற்கு நடிகர் திலீப் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இஸ்டகிராம் பதிவில், ”நிறைய சினிமாக்களில் ஒன்றாக நடித்ததுடன், அவருடன் ஒரு சகோதரனை போன்ற அன்பான உறவு இருந்தது. எதிர்பாராத இந்த இழப்பு வருத்தம் தருகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும் படிக்க: Salaar Trailer: கேஜிஎஃப் ரசிகர்கள் அடுத்த சம்பவத்துக்கு தயாராகுங்க.. பிரபாஸின் ‘சலார்’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி இதுதான்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
கல்வி
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion