மேலும் அறிய

மலையாள குழந்தை நட்சத்திரங்கள் டூ முன்னணி கதாநாயகிகள்..! வருங்கால திரையுலகை ஆளப்போகும் 2k கிட்ஸ்!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான சில 2கே கிட்ஸ் தற்போது கதாநாயகிகளாகவும் உருவெடுத்து உள்ளார்கள். அந்த மலையாள குழந்தை நட்சத்திரங்கள் யார் தெரியுமா..?

குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பின்னர் ஹீரோயினாக வலம் வந்தவர்கள் பலர். தமிழில் நடிகை மீனா, ஷாலினி, மலையாளத்தில் நஸ்ரியா என பல முன்னணி கதாநாயகிகளும் குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பின்னர் திரையுலகில் டாப் லிஸ்டில் இருந்தவர்கள் தான். இதே போல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான சில 2கே கிட்ஸ் தற்போது கதாநாயகிகளாகவும் உருவெடுத்து உள்ளார்கள். வருங்கால திரையுலகம் இவர்கள் கையில் தான் என்ற அளவிற்கு வளர்ந்து இருக்கும் அந்த மலையாள குழந்தை நட்சத்திரங்கள் யார் தெரியுமா..?

எஸ்தர் அனில்

மலையாள குழந்தை நட்சத்திரங்கள் டூ முன்னணி கதாநாயகிகள்..!  வருங்கால திரையுலகை ஆளப்போகும் 2k கிட்ஸ்!

நடிகை எஸ்தர் அனில் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த நல்லவன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். பின்னர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2  ஆகிய திரைப்படங்களில் அனு என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். தமிழிலும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் நடித்திருந்தார்.பாபநாசம் திரைப்படத்தில் கமலுக்கு இரண்டாவது மகளாக நடித்திருப்பார் எஸ்தர். இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கிறார் எஸ்தர் அனில். இவருக்கு ஒரு மில்லியன் ஃபாலோர் கவுன்ட் இன்ஸ்டாகிராமில் உள்ளது. வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர், அடுத்த ஜெனரேஷன் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் நிச்சயம் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவானா

மலையாள குழந்தை நட்சத்திரங்கள் டூ முன்னணி கதாநாயகிகள்..!  வருங்கால திரையுலகை ஆளப்போகும் 2k கிட்ஸ்!

நாச்சியார் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த அரசியை நம் அனைவருக்கும் தெரியும். அவர்தான் இவானா! மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவரது தமிழ் அறிமுகத்தை இயக்குநர் பாலா நிறைவேற்றினார். அரசி, இவானாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக நிச்சயம் இருக்கும். இவானாவின் இயற்பெயர் அலீனா ஷாஜி. மாஸ்டர்ஸ் என்னும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அனுராக கரிக்கின் வெள்ளம் படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் அலீனா பற்றி கேள்விப்பட்ட இயக்குநர் பாலா, அவரது படமான நாச்சியார் படத்தில் அலீனாவை அரசியாக அறிமுகப்படுத்தினார். பாலாவின் அறிமுக நட்சத்திரங்கள் என்னைக்குமே முன்னணி பட்டியலில் இருப்பார்கள். அந்த வரிசையில் இவானாவும் நிச்சயம் இருப்பார் என நம்பலாம்.

அனிகா சுரேந்திரன் 

மலையாள குழந்தை நட்சத்திரங்கள் டூ முன்னணி கதாநாயகிகள்..!  வருங்கால திரையுலகை ஆளப்போகும் 2k கிட்ஸ்!

அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானார். தமிழில் நடிகர் அஜித்தின் ரீல் மகள் என்றால் அது அனிகா தான்…என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக நடித்ததன் தொடர்ச்சியாக விஸ்வாசம் படத்திலும் அஜித்திற்கு மகளாகவே நடித்திருந்தார். மிருதன், நானும் ரவுடி தான் படங்களிலும் நடித்துள்ளார் அனிகா.  மா‌ என்னும் இவரது குறும்படம் ஒன்று மெகா ஹிட் ஆனது. சமீபத்தில் பல போட்டோசூட்கள் செய்து இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அஜித் மகளா இது..! ரசிகர்கள் கூட்டம் அனிகாவிற்கு அலை மோதுகிறது. இவருக்கு இன்ஸ்டாவில் 1 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். இவரும் அடுத்த ஜெனரேஷன் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர்.

அனஸ்வரா ராஜன்

மலையாள குழந்தை நட்சத்திரங்கள் டூ முன்னணி கதாநாயகிகள்..!  வருங்கால திரையுலகை ஆளப்போகும் 2k கிட்ஸ்!

அனஸ்வரா ராஜன் மலையாள குறும்படமான குளோப் என்ற படத்தின் மூலம் ஆனார். இவரது முதல் திரைப்படம் உதாஹரணம் சுஜாதா 2017 இல் வெளியானது. தண்ணீர் மதந்தினங்கள் என்ற படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் அனஸ்வரா பிரபலமானார். பிறகு 2022 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த சூப்பர் சரண்யா படம் மெகா ஹிட் ஆனது. மலையாள படங்கள் இன்றி தமிழ் திரையுலகிலும் காலடி பதித்து விட்டார் அனஸ்வரா. த்ரிஷா நடிக்கும் ராங்கி திரைப்படத்தில் அனஸ்வரா நடித்துள்ளார். இந்த படம் நடப்பாண்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வருங்கால ஹிட் கதாநாயகிகள் பட்டியலில் அனஸ்வராவும் இருப்பார்.

கோபிகா ரமேஷ் 

மலையாள குழந்தை நட்சத்திரங்கள் டூ முன்னணி கதாநாயகிகள்..!  வருங்கால திரையுலகை ஆளப்போகும் 2k கிட்ஸ்!

கோபிகா ரமேஷ் மாடலாக இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்தார். பிரபல மலையாள திரைப்படமான தண்ணீர் மதந்தினங்கள் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஒருவராக கோபிகா ரமேஷும் நடித்திருந்தார்.  சுனில் ஹனீஃபின் ஃபோர் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கோபிகா நடித்துள்ளார். சமீபத்தில் தமிழ் வெப் சீரிஸான சுழல் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த வெப் சீரிஸில் நிலா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் கோபிகா ரமேஷ் நடித்துள்ளார். இவரும் சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்Sengottaiyan | டார்கெட் எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையனுக்கு support! அமித்ஷா பிரம்மாஸ்திரம்Prashant Kishor meets TVK Vijay | LEAK-ஆன ஆடியோ! ஸ்கெட்ச் போட்ட PK! ஜான் ஆரோக்கியசாமி OUT!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Embed widget