Malayalam Actor Arrest: சிறுமிகளிடம் அருவெறுப்பு செயல்... ‘கும்கி நடிகர்’ போக்சோவில் கைது!
மலையாள நடிகரான ஸ்ரீஜித் ரவி திருச்சூரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ஸ்ரீஜித் ரவி சிறுமிகளிடம் மர்ம உறுப்பை காட்டியதற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கள் கிழமை கேரள மாநிலம் பாலக்காட்டில் அருகே காரில் நின்று கொண்டிருந்த ஒருவர், அங்கிருந்த சிறுமிகளிடம் ஆடையை கழற்றி மர்ம உறுப்பை காட்டியுள்ளார். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவலர்களிடம் குழந்தைகளுக்கு அந்த நபரை சரியாக சொல்லத் தெரியவில்லை.
இதனையடுத்து காவலர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது குழந்தைகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது மலையாள நடிகர் ஸ்ரீஜித் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த நிலையில், தனக்கு மனரீதியான பிரச்னைகள் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஸ்ரீஜித் போலீசிடம் வாக்கு மூலம் அளித்து இருக்கிறார்.
முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் முன்பு ஆடையை அவிழ்த்து மர்ம உறுப்பை காட்டியதற்காகவும், அந்த குழந்தைகளுடன் இணைந்து புகைப்படங்கள் எடுக்க முயற்சி செய்ததற்காவும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
View this post on Instagram
46 வயதான ஸ்ரீஜித் பிரபல நடிகர் டி.ஜி. ரவியின் மகன் ஆவார். அடிப்படையில் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் படிப்பை முடித்த அவர், மேலாண்மை படிப்பையும் முடித்திருக்கிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு மலையாள திரையுலத்திற்குள் நுழைந்த அவர், 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் “ கதகளி’ ‘கும்கி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.