மேலும் அறிய

Celebration at Maaveeran set : களைகட்டிய 'மாவீரன்' படக்குழு... கேக் வெட்டி கொண்டாட்டம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ  

சிவகார்த்திகேயனின் 11 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினர் 'மாவீரன்' படக்குழு. அந்த கொண்டாட்டத்தின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

சின்னத்திரத்தில் ஒரு காமெடி நிகழ்ச்சி மூலம் முதன் முதலில் அடியெடுத்து வைத்து ஒரு தொகுப்பாளராக இருந்து பின்னர் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 11 ஆண்டுகால திரைப் பயணத்தை நிறைவு செய்துள்ளார். 

சிவகார்த்திகேயன் - மடோன் அஸ்வின் - மாவீரன் செட்
சிவகார்த்திகேயன் - மடோன் அஸ்வின் - மாவீரன் செட்

பன்முக கலைஞன் சிவகார்த்திகேயன் :

சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணித்து மாபெரும் வெற்றி பெற்ற கலைஞர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானது 2012ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'மெரினா' திரைப்படம் மூலம் தான். அதை  தொடர்ந்து அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி இன்று நடிகர் மட்டுமின்றி பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக கலைஞராக திறம்பட தனது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அனைவருக்கும் நம்ம வீட்டு பிள்ளையாகவே திகழ்கிறார் சிவகார்த்திகேயன் என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது. 

'மண்டேலா' இயக்குனருடன் கூட்டணி :

தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வினுடன்  கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'மாவீரன்'. 'மண்டேலா' திரைப்படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றவர் மடோன் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படத்தை தயாரித்த சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தான் தற்போது அவர் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்தை தயாரிக்கிறது. 

வைரல் வீடியோ :

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் மாவீரன் படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயனின் 11 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த வீடியோவில் நடிகை சரிதா, இயக்குனர் மடோன் அஸ்வின் உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனுக்கு கேக் ஊட்டிவிடுவது, செல்ஃபி எடுத்துக்கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மாவீரன் படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டது படக்குழு. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget