Maaveeran: கார்ட்டூன் ஷர்ட் குல்லாவுடன் மாவீரன் பார்க்க ரோகினி தியேட்டருக்கு சென்ற சிவகார்த்திகேயன்... வைரலாகும் வீடியோ!
மாவீரன் படம் இன்று வெளியாக ஆகிய உள்ள நிலையில், அப்படத்தின் FDFS பார்க்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Maaveeran: மாவீரன் படம் இன்று வெளியாக ஆகிய உள்ள நிலையில், அப்படத்தின் FDFS பார்க்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாவீரன்:
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியாகும் திரைப்படம் மாவீரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, யோகி பாபு, மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாவீரன் படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
இதில் இரண்டாவது பாடலான ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலை சிவகார்த்திகேயன் - அதிதி சங்கர் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் இன்று (ஜூலை 14) பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.
மாவீரன் FDFS பார்க்க வந்த சிவகார்த்திகேயன்
Our #Maaveeran @Siva_Kartikeyan anna's arrival at @RohiniSilverScr 🤩🔥#VeerameJeyam #MaaveeranFDFS #MaaveeranFromToday pic.twitter.com/XBPgbcawmO
— All India SKFC (@AllIndiaSKFC) July 14, 2023
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ப்ரின்ஸ். இந்த படம் விமர்சகர்களால் வருத்தெடுக்கப்பட்டதுடன் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இந்நிலையில், தற்போது வெளியான மாவீரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதற்கிடையில், சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திற்கு ட்விட்டரில் தம்பஸ் அப் பதிவிட்டுள்ளார் உதயநிதி.
மேலும் படிக்க