"Maamannan" Team : உதயநிதி ஸ்டாலின்... வடிவேலுவுடன்... கீர்த்தி சுரேஷ் கொண்டாடிய ஓணம் பண்டிகை!
Onam Celebration : "மாமன்னன்" படக்குழுவினர் ஓணம் கொண்டாட்டங்களை கேரளாவின் பாரம்பரிய உணவோடு சிறப்பாக கொண்டாடினார்.
![Maamannan team celebrates onam celebration and sahres photos in Social media](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/08/2138d233ebec9b9e2b33021a3cf3d5631662648574392224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
"Maamannan" Team Onam Celebration : ஓணம் பண்டிகையை "மாமன்னன்" படக்குழுவினரோடு கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்
"பரியேறும் பெருமாள்" மற்றும் "கர்ணன்" போன்ற திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "மாமன்னன்". இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பது மட்டுமின்றி லீட் ரோலில் நடித்தும் உள்ளார். பஹத் பாஃசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். ஒளிப்பதிவு பணிகளை தேனி ஈஸ்வர் மேற்கொள்ள படத்தொகுப்பை செல்வா செய்ய எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார் ஆர் கே.
முதல் படத்திலேயே வெற்றி:
மாரி செல்வராஜ் தனது முதல் படமான "பரியேறும் பெருமாள்" திரைப்படத்திலேயே வெற்றியின் உச்சத்தை தொட்டவர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம். அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான "கர்ணன்" திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டியது. அழுத்தமான திரைக்கதையோடு ஜனரஞ்சகமான படத்தை எடுப்பதில் வல்லவரான மாரி செல்வராஜ் இப்படத்திலும் ஒரு அழுத்தமான கருத்தை முன்வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னன் திரைப்படம் ஒரு பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களின் வெற்றிக்கு தொடர்ந்து அடுத்ததாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏகபோக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
படத்தின் ஹீரோ வடிவேலு :
நடிகர் வடிவேலு ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்துள்ள படம் " நாய் சேகர் ரிட்டன்ஸ்". அதனை தொறந்து மாமன்னன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் மாமன்னன் கதாபாத்திரத்தில் நடிப்பது உதயநிதி ஸ்டாலின் அல்ல வடிவேலு என்ற ஷாக் செய்தியை ஏற்கனவே வெளியிட்டனர் படக்குழுவினர். மேலும் வடிவேலுவின் மகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.
Fahad ❤️❤️❤️ #Mamannan #FaFa pic.twitter.com/fuuadeSadG
— CinemaTicket (@CinemaTicket_) June 5, 2022
மேலும் இப்படத்தில் வில்லனாக அழகம்பெருமாள் நடிப்பதாகவும் அவரின் மகனாக பஹத் பாஃசில் எனவும் கூறப்படுகிறது. அரசியல் கதைக்களத்தை வித்தியாசமான கோணத்தில் படப்பிடித்துள்ளார் மாரி செல்வராஜ் என கூறப்படுகிறது. மிகவும் மும்மரமாக நடைபெற்று வரும் இந்த படத்தின் பணிகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Maamannan team celebrates ONAM pic.twitter.com/PiP8FCAdHt
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 8, 2022
ஓணம் கொண்டாட்டம் :
ஓணம் பண்டிகையான இன்று "மாமன்னன்" படக்குழுவினர் ஓணம் கொண்டாட்டங்களை கேரளாவின் பாரம்பரிய உணவோடு சிறப்பாக கொண்டாடினார். அவர்களின் ஓணம் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)