மேலும் அறிய

Maamannan Poster: மென் இன் பிளாக்... வடிவேலு, உதயநிதியுடன் கருப்பு உடையில் ஃபஹத்... மாமன்னன் புது போஸ்டர்!

மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகலாம் எனக்கூறப்படும் நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மாமன்னன் படத்தில் நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் இடம்பெற்றிருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாரி செல்வராஜின் 3ஆவது படம்

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தைத் திருப்பி  முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. 

நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், ஏற்கெனவே இதுதான் சினிமாவில் தன் கடைசி படம் என அறிவித்துவிட்டார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிலையில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தில் முதன்முறையாக மாரி செல்வராஜ் உடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நிறைவடைந்த படப்பிடிப்பு

சென்ற ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி சேலத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகள், சென்னை என படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  இப்படத்தின் அப்டேட்கள் இந்த வாரம் வரும் என முன்னதாக மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார். அதன்படி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

புது போஸ்டர்

அந்த வரிசையில் தற்போது மற்றுமொரு போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின் மூவரும் கருப்பு உடை அணிந்து இந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ள நிலையில், சற்று முன் இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

 

இதேபோல், கையில் துப்பாக்கியுடன் வெள்ளை வேட்டி  சட்டையில் வடிவேலுவும், கையில் வாளுடன் உதயநிதி ஸ்டாலினும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் கேப்ஷன் உடனும் நேற்று ஒரு போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகலாம் எனக்கூறப்படும் நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக மாமன்னன் படம் பற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய படத்தை, அரசியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஆதரவாக பேசுவதாகவும் பயணிப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் வடிவேலுவை வேறு ஒரு தளத்தில் காண்பிக்க முயற்சித்துள்ளதாகவும், தமிழ் ரசிகர்களுக்கு இது சர்ப்ரைஸாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget