மேலும் அறிய

Maamannan Audio Launch: 'சினிமாவில் சமூகநீதி பேசியதால் தான், அதற்கு எதிரானவர்களை எதிர்க்க முடிகிறது’ - இயக்குநர் வெற்றிமாறன்

சமூக நீதியை சினிமாவில் பேசியதால் தான் சமூக நீதிக்கு எதிரானவங்களை நாம் எதிர்க்க முடிகிறது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 

சமூக நீதியை சினிமாவில் பேசியதால் தான் சமூக நீதிக்கு எதிரானவங்களை நாம் எதிர்க்க முடிகிறது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 

மாமன்னன் இசை வெளியீட்டு விழா

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “மாமன்னன்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 1) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். மேலும் இயக்குநர்கள் வெற்றிமாறன், கே.எஸ்.ரவிக்குமார், மிஸ்கின், விஜய் ஆண்டனி, தியாகராஜா குமாரராஜா, ஏ.எல்.விஜய், ரவிகுமார், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் நடிகர்கள் கவின், சிவகார்த்திகேயன், சூரி என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

சினிமாவில் சமூக நீதி

இந்நிகழ்வில் பேசிய வெற்றிமாறன், “தமிழ்நாட்டுல மட்டும் தான், தமிழ் ரசிகர்கள் மட்டும் தான் கொஞ்சம் வழக்கமான படங்களை எடுக்காமல், கொஞ்சம் இந்த மாதிரி படம் எடுக்குற படைப்பாளர்களையும் ரசிக்கிறாங்க. தமிழ் சினிமாவின் ரசிகர்கள் தான் உலக ரசிகர்களுக்கு முன்னோடி என அடிக்கடி சொல்லுவேன். அது கமல்ஹாசனுக்கு நன்றாக தெரியும். அவரின் பல பரிசோதனைகளை நாம் ரசித்திருக்கிறோம். அந்த வகையில் சமூக நீதிகளை பேசுகிற படங்களை எடுத்து வணிக ரீதியான வெற்றியை கொடுக்க முடியும் அப்படிங்கிறது

தமிழ்நாட்டில் மட்டும் தான். வேற எங்கேயும் நடக்காது அது. சினிமாவில் மட்டுமல்லாது அது சமூகத்திலும் முக்கியமான இடத்தை கொடுக்கிறது தமிழ்நாடும், தமிழ் ரசிகர்களும் மட்டும் தான். அந்த வரிசையில் வருபவர் தான் மாரி செல்வராஜ். முதல் 2 படங்களாக இருக்கட்டும். இந்த படமாக இருக்கட்டும். அடுத்து பண்ணப்போகிற படமாக இருந்தாலும் இப்படி தான் செயல்பட போகிறார். இந்த படம் ரொம்ப ஸ்பெஷல்.

ஏன்னா, மாமன்னன் படத்தோட டைட்டில் ரோல் உதயநிதி பண்ணவில்லை. அதை செய்றது வடிவேலு தான். அவர் வந்து தமிழ் சினிமாவுல இருக்கிற ரொம்ப கம்மியான ஒரிஜினல் நடிகர்களில் ஒருவர். அவரை வந்து ஒரு சீரியஸ் ரோல்ல பார்க்கணும்ன்னு நான் ஆசைப்பட்டேன். உதயநிதி இல்லைன்னா அவர் இந்த கேரக்டரை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என நினைக்கிறேன். 

இந்த மாதிரி நடிச்சது, தமிழ் சினிமாவில் புதிதாக படம் பண்ண நினைக்கிறவங்க இதை விட சிறப்பான கதையோட வருவாங்க.  அது ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். வடிவேலு தமிழ் மொழிக்கே தன்னை அர்ப்பணிக்கிறாரு என சொல்லணும். அவரின் நகைச்சுவை தான் மதுரை வட்டார மொழியை எனக்கு புரிய வைத்தது. இப்படி ஒரு டீம் அமைத்து அதில் தன்னுடைய பெயரை கடைசியில் போட்டது பெரிய விஷயம் (போஸ்டரில் உதயநிதி பெயர் கடைசியில் இருப்பதை குறிப்பிட்டு சொன்னார்) ஒன்றிற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.

நீங்க இதன்பிறகு நடிக்கிறீங்களோ இல்லையோ இந்த மாதிரி படங்களில் வர்றதுக்கான வசதிகளை பண்ணி கொடுக்கணும். சமூக நீதியை சினிமாவில் பேசியதால் தான் இந்த மாதிரி சமூக நீதிக்கு எதிரானவங்களை தமிழ்நாட்டில் இருந்து நாம் எதிர்க்க முடிகிறது. தொடர்ந்து இதுபோன்ற படங்கள் வரவேண்டும். அதற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வெற்றிமாறன் கூறினார். 

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget