Vairamuthu : அன்னையர் தினத்தில் அன்னையை பிரிந்த வைரமுத்து...அத்தனை அரசியல் தலைவர்களும் இரங்கல்
கவிஞ்சர் பாடலாசியர் வைரமுத்துவின் அன்னை அங்கம்மாள் இன்று காலமாகியுள்ள செய்து ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

வைரமுத்துவின் அன்னை காலமானார்
தமிழ் சினிமாவில் பல சிறந்த பாடல்களை எழுதியவர் வைரமுத்து. அவரது தாயார் இன்று மே 10 ஆம் தேதி காலமானார். இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்."என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன் இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்" என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
நாளை மே 11 ஆம் தேதி உலகமே அன்னையர் தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் வைரமுத்துவின் அன்னை இறந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வைரமுத்துவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்
என்னைப் பெற்ற அன்னை
— வைரமுத்து (@Vairamuthu) May 10, 2025
திருமதி அங்கம்மாள் அவர்கள்
இன்று சனிக்கிழமை மாலை
இயற்கை எய்தினார் என்பதை
ஆழ்ந்த வருத்தத்தோடு
அறிவிக்கிறேன்
இறுதிச் சடங்குகள்
தேனி மாவட்டம் வடுகபட்டியில்
நாளை ஞாயிறு மாலை
நடைபெறும் pic.twitter.com/bbBpOeFHjx
டிடிவி தினகரன் இரங்கல்
"கவிப்பேரரசு திரு வைரமுத்து அவர்களின் தாயார் திருமதி அங்கம்மாள் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. பெற்ற அன்னையை இழந்துவாடும் சகோதரர் திரு.வைரமுத்து அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்
இயக்குநர் சீனு ராமசாமி இரங்கல்
அன்புத் தாயார் அங்கம்மாள் அவர்கள் இயற்கையோடு வாழ்ந்து இயற்கையோடு நிறைந்தார். எங்கள் இதய அஞ்சலி தாயாரை இழந்து வாடும் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும் உற்றார் உறவினர் சொந்தங்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர் அன்பில் மகேஷ் இரங்கல்
எனக்கொண்ணு ஆனதுன்னா ஒனக்குவேற பிள்ளையுண்டு ஒனக்கேதும் ஆனதுன்னா எனக்குவேற தாயிருக்கா? என்கிற வைரமுத்துவின் அம்மாவைப் பற்றிய கவிதையை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்
தொல் திருமாவளவன் இரங்கல்
உதயநிதி ஸ்டாலின்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தாயார் திருமதி.அங்கம்மாள் அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினோம். அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அன்னையாரை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் - அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் தங்கர் பச்சன்
வைரமுத்து எனும் அறிவு மகனைப் பெற்ற தாய்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மகனின் பெருமையிலேயே வாழும் உயிர் அம்மா மட்டுமே! அம்மாவின் மேல் அண்ணன் கொண்ட பாசமும் பற்றும் குறித்து நான் நன்கு அறிவேன். அண்ணனுக்கு எனது ஆறுதல்கள்!
ஓ பன்னீர்செல்வம் இரங்கல்
அவர்களின் தாயார் திருமதி அங்கம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். தாயை இழந்து வாடும் திரு. வைரமுத்து மற்றும் அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தினையும்
முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல்
தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.





















