மேலும் அறிய

Lucifer 2 - Empuran: விரைவில் லூசிஃபர் 2 - எம்புரான்... கேஜிஎப் பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ள 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க, மோகன்லால் நடிக்க, முரளி கோபி திரைக்கதையை எழுதுகிறார்.

மலையாள திரையுலகில் அசைக்க முடியாத ஒரு வெற்றியை பெற்ற ஒரு திரைப்படம் 'லூசிஃபர்'. நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மாலிவூட் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் 2019ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், சானியா ஐயப்பன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் அமோகமான வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அந்த வகையில் இப்படத்தின் அதிகாரபூர்வமான போஸ்டர் ஒன்றை தற்போது வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். 

 

Lucifer 2 - Empuran: விரைவில் லூசிஃபர் 2 - எம்புரான்... கேஜிஎப் பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ராஜநடை போட்டு வருகிறார் 'எம்புரான்' :

'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகத்தையும் நடிகர் பிருத்விராஜ் இயக்க, படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார் முரளி கோபி. இந்த இரண்டாம் பாகத்திற்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் மோகன் லால் நடிக்க படத்தின் இயக்குனர் பிருத்விராஜூம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது இந்த கம்ப்ளீட் என்டர்டெயின்மென்ட் திரைப்படமான 'எம்புரான்'. இப்படத்தை பான் இந்திய திரைப்படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். முதல் பாகம் அமோகமான  வெற்றியை பெற்றதால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. எம்புரான் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழுவினர் இப்படம் 2024ல் வெளியாகும் என்பதையும் அதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். 2023ம் ஆண்டு மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 


தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட லூசிஃபர்:

'லூசிஃபர்' திரைப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இந்த ஆண்டு தான் வெளியானது. இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய இந்த ரீமேக் திரைப்படத்தின் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்திருந்தார். மேலும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவும் நடித்திருந்தார். இந்த தெலுங்கு ரீமேக் திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

இயக்குனரின் ஃபேவரட் ஹீரோ : 

முதல் பாகமான 'லூசிஃபர்' படத்தை மோகன்லால் ரசிகர்கள் கொண்டாடினர். மோகன்லால் ரசிகரான இயக்குனர் பிரித்விராஜ் தன் ஃபேவரட் ஹீரோவை இயக்க வாய்ப்பு கிடைத்ததும்  அவரை  எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டாரோ அப்படி எல்லாம் செதுக்கி இருந்தார். அதே போல் இந்த இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்திலும் ஏராளமான அதிசயம் ஆச்சரியத்தை நான் எதிர்பார்க்கலாம்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget