கூலி ஆடியோ லாஞ்சுல பாத்துக்குறேன்...லோகேஷிடம் ரஜினி ஏன் இப்படி சொன்னார் தெரியுமா
லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்துள்ள கூலி படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தைப் பற்றி லோகேஷ் சிறப்பு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கூலி . சத்யராஜ் , நாகர்ஜூனா, ஸ்ருதி ஹாசன், செளபின் சாஹிர் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் கூலி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பேட்டி ஒன்றில் தான் கமல் ரசிகர் என்பதால் ரஜினி தன்னிடம் சொன்னதை பகிர்ந்துகொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்
ஆடியோ லாஞ்சுல பாத்துக்குறேன் - ரஜினி
" சின்ன வயதில் இருந்தே நான் கமல் ரசிகன் தான். எங்கள் வீட்டில் என்னை தவிர மற்ற எல்லாரும் ரஜினி ரசிகர்கள். என் அம்மாவிடம் ரஜினி சார் படம் பண்ண போகிறேன் என்று சொன்னதும் சின்ன வயதில் 'சூப்பர்ஸ்டார் யாருன்னு கேட்டா' பாட்டு இல்லாமல் நான் சாப்பிடமாட்டேன் என்று சொன்னார். கமலின் சத்யா படம் பார்த்தபின் சினிமா பற்றிய என்னுடைய பார்வை மொத்தமாக மாறியது. கூலி படத்தின் கதையை ரஜினி சாரிடம் சொன்னபோதே பேச்சுவாக்கில் நான் கமல் சார் ரசிகன் என்று சொல்லிவிட்டேன். அப்போது ரஜினி சார் எதுவும் சொல்லவில்லை. டப்பிங் வேலைகள் எல்லாம் முடிந்தபிறகு உதவி இயக்குநர்களிடம் ரஜினி சார் பேசியபோது ஒன்று சொன்னார். 'நான் ஒரு கமல் ரசிகன் என்று சொல்லிதான் என்கிட்ட லோகேஷ் கதையே சொன்னார். அவரை கூலி ஆடியோ லாஞ்சுல பாத்துக்குறேன்' என்று ரஜினி சார் விளையாட்டாக சொன்னார். ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்தால் இன்னொரு நடிகை ரசிக்கக் கூடாது என்றில்லை. கமல் ரசிகனான நான் ரஜினி சாருக்கு படம் பண்ணுவது கூடுதல் பொறுப்புதான். தன்னுடைய ரசிகர் தன்னுடைய நண்பரின் படத்தை இயக்குவதில் தனக்கு பெருமைதான் என கமலே ஒருமுறை மேடையில் சொன்னார்' என லோகேஷ் கனகராஜ் பேசினார்
During #Coolie dubbing,#Rajinikanth: When Lokesh came for narration, you said #KamalHaasan sir fan. I will see you in Coolie Audio Launch😂#LokeshKanagaraj: Now i have more responsibility, as Kamal sir said to make proper film with Rajini sir & come♥️ pic.twitter.com/jLhLYfzlqh
— AmuthaBharathi (@CinemaWithAB) July 24, 2025





















