Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ள 'கூலி' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஐதராபாத்தில் ஆரம்பம்.
தமிழ் சினிமாவில் ஆல் டைம் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் படம் குறித்த அப்டேட் எதுவாக இருந்தாலும் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் ரஜினிகாந்த் சமீபத்தில் தான் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பை முடித்து அடுத்த படத்துக்கு மாஸாக தயாராகி வருகிறார். டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக மும்மரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி சேர்ந்துள்ள 'கூலி' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு ஆரம்பம் :
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக இருக்கும் 'கூலி' படத்தின் ஷூட்டிங் தள்ளி போன நிலையில் இந்த மாதம் துவங்கும் என்ற அறிவிப்பு முன்னரே வெளியானது. அந்த வகையில் இன்று முதல் ஐதராபாத்தில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்க உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் ஐதராபாத் விரைந்துள்ளார். கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு ஆக்ஷன் சீக்வன்ஸ்கான ஷூட்டிங் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு பெரும்பாலும் ஐதராபாத் மற்றும் சென்னையில் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு இதுவரையில் வெளியகவில்லை. நிச்சயம் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கும் என்ற நம்பிக்கையுடன் மிகவும் ஆவலுடன் 'கூலி' படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.
கவனம் ஈர்த்த டெஸ்ட் லுக் :
சில தினங்களுக்கு முன்னர் டைட்டில் ப்ரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் ரஜினிகாந்த் டெஸ்ட் லுக் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்காக அதிகரித்தது. இதில் அவரின் கேரக்டர் நெகட்டிவ் ஷேடில் இருக்கும் என லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன், ஆர்ட் டைரக்டராக சதீஷ் குமார், எடிட்டராக பிலோமின் ராஜ் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவ் இணையுள்ளனர் என கூறப்படுகிறது. இருப்பினும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த முழு விவரமும் வெளியாகவில்லை.