Lokesh Kanagaraj Lexus Car: நன்றி ஆண்டவரே.. கமல் கொடுத்த கிஃப்ட்.. லோகேஷ் என்ன சொன்னார் தெரியுமா?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் தனக்கு கிப்ஃட்டாக கொடுத்த காரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் தனக்கு கிப்ஃட்டாக கொடுத்த காரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Thank you so much Aandavarey @ikamalhaasan 🙏🏻 ❤️❤️❤️ pic.twitter.com/h2qZjWKApm
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 7, 2022
அந்த ட்விட்டர் பதிவில் லோகேஷ் கனகராஜ், காரை பரிசாக தந்த கமல்ஹாசனை டேக் செய்து ‘நன்றி ஆண்டவரே’ என்று பதிவிட்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் பணியாற்றிய துணை இயக்குநர்கள் 13 பேருக்கு அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கும் வழங்கப்பட்டுள்ளது.
Also, #Ulaganayagan gifted 13 ADs of @Dir_Lokesh who worked in #Vikram TVS Apache RTR 160 Motor Bikes.. https://t.co/yzv6CpqIEI
— Ramesh Bala (@rameshlaus) June 7, 2022
முன்னதாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 3 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
'விக்ரம்' என்ற ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்தில் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கமல்ஹாசன் நீண்ட நாட்களுக்கு பிறகு பவர் பேக்கான நடிப்பை வெளிப்படுத்தினார். இவரது நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அன்பளிப்பாக இந்த திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 175 கோடி வசூல் செய்துள்ளது.
View this post on Instagram