OTT Release: திரைப்பட ரசிகர்களே..! இதுதான் இந்த வார ஓடிடி பட ரிலீஸ் லிஸ்ட்!!
OTT Release this Week: இந்தவாரம் வெளியாகவுள்ள ஓடிடி பட ரிலீஸ் லிஸ்ட்..
OTT Release This Week: மூவி லவ்வரா நீங்கள். உங்களை ஃபுல்ஃபில் பன்றதுக்கான நேரம் இது. ஓடிடி தளங்களில் ஏகப்பட்ட படங்கள் உங்களுக்காக காத்திருக்கு. டாப் ஓடிடி தளங்களான நெட்ஃபிளிக்ஸ் அமேசான் ப்ரைம் டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் மற்ற தளங்களில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படங்களின் தொகுப்பை காணலாம்.
பிரம்மம்
ஹிந்தி படமான டார்க் காமெடி அந்தாதுன் படம் மலையாளத்தில் பிரம்மம் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. பிரித்திவிராஜ் சுகுமாரன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் மம்தா மோகன்தாஸ் மற்றும் ராஸிகண்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.
The truth comes to light in one more day!
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) October 6, 2021
Watch #BhramamOnPrime out tomorrow, Available only in India.
@Iamunnimukundan @mamtamohan @RaashiiKhanna_ @dop007 @JxBe @PrimeVideoIN @APIfilms @Viacom18Studios @AkshitaWadhwa18 pic.twitter.com/W7gO0gSycv
ராஜராஜ சோரா
தெலுங்கு காமெடி திரைப்படமான ராஜ ராஜ சோராவில் ஸ்ரீவிஷ்ணு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தியேட்டரில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. இதைத் தொர்ந்து ஓடிடி தளமான ஜீ5இல் அக்டோபர் 9ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
தலைவி
பயோகிராஃபிகல் படமான தலைவி திரைப்படம் ஹிந்தியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் கங்கனாரனாவத் மற்றும் அரவிந்த்சாமி நடித்துள்ளனர். அக்டோபர் 10ஆம் தேதி முதல்
தெலுங்கு மற்றும் தமிழி்ல் இத்திரைப்படம் வெளியிப்படவுள்ளது.
மேட்ரஸ்
ஆங்கிலத் திரைப்படமான மேட்ரஸ் படம் ஒரு ஹாரர் மூவி. அரியானா குவேரா மற்றும் டெனோக் ஹுரேட்டா முக்கிய கதாப்பரத்தில் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். அக்டோபர் 8ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
அமாங் தி ஸ்டார்
அமாங் தி ஸ்டார் டாக்குமென்ட் சீரீஸ் இன்று அக்டோபர் 6ஆம் தேதி டிிஸ்னி ஹாட்ஸ்டாரி்ல் வெளியிடப்பட்டுள்ளது. நாசா ஆராய்ச்சி மையம் பற்றியும், விண்வெளி தொடர்பான திட்டங்கள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள இந்த டாக்குமென்ட் சீரிஸ் 6 பகுதிகளைக் கொண்டுள்ளது.
>>ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்