(Source: ECI/ABP News/ABP Majha)
Mike Tyson in Liger: மைக் டைசனும் லைகர் வைஃபிரேசனும்...மாஸ் எண்ட்ரி பீஸ் ஆன சோகம்!
‘லைகர்’ படம் மூலமாக இந்திய சினிமாவில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் ‘மைக் டைசனுக்கு அந்தப்படம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
‘லைகர்’ படம் மூலமாக இந்திய சினிமாவில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் ‘மைக் டைசனுக்கு அந்தப்படம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
விஜய்தேவரகொண்டா, மைக் டைசன், அனன்யா பாண்டே உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘லைகர்’. மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தத்திரைப்படம் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் எதிர்மறையான விமர்னங்களை பெற்று வருகிறது.
இந்தப்படம் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கான ஒரு காரணம் விஜய்தேவரகொண்டா என்றால், இன்னொரு காரணம்.. மைக் டைசன். ஆம் பிரபல குத்துச்சண்டை வீரராகவும், பாக்ஸிங்கில் ஈடுபடுவோருக்கு முன்மாதிரியாகவும் விளங்கும் டைசனை திரையில் எப்படி காண்பித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவே பல பாக்ஸிங் வீரர்கள் திரையரங்கிற்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் அதன் அத்தனை எதிர்பார்ப்பையும் மைக் டைசனுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சுக்குநூறாக உடைத்துவிட்டது என்பதே நிதர்சன உண்மையாக கசக்கிறது.
View this post on Instagram
வழக்கம் போல, ஒரு பிரபல வில்லனுக்கு கொடுக்கப்படும் பில்டப்புகளுடனே, முன்னால் குதிரைகள் செல்ல, டைசன் காரில் இறங்கி வந்துமாஸ் எண்ட்ரி கொடுக்க, அதுவரை படத்தால் விரக்தியின் உச்சத்தில் இருந்த ரசிகர்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மைக் டைசனை கரவொலி எழுப்பி கொண்டாட ஆரம்பித்தனர்.
ஏமாற்றம் அளித்த மைக் டைசன்
தனது காதலியை வைத்திருக்கும் டைசனிடம், அவரை மீட்டுக் கொண்டு வர, பரபரவென சென்று நிற்கும் விஜய் தேவரகொண்டா தனது ஆதர்சன குருவை பார்த்ததும், குருவே என சரணடைந்து உங்களிடம் உள்ள எனது காதலியை கொண்டு செல்ல வந்திருக்கிறேன் என சொல்கிறார் விஜய். சரி சீடனாய் போய்விட்டாய் காசை கொடுத்து விட்டு அழைத்துச் செல் என டைசன் சொல்ல, காசு இல்லாமல்தான் அழைத்துச் செல்ல வந்தேன் என்கிறார் விஜய்..
இதனால் டைசன் ஒருபக்கம் கடுப்பேற, இன்னொரு பக்கம் காதலியை கொண்டு சென்றே தீருவேன் என்று விஜய் நிற்க மோதல் வெடிக்கிறது. அவ்வளவு பெரிய பாக்ஸிங் வீரருக்கு இப்படி ஒரு சண்டைக்காட்சியா என்பது போலத்தான் அந்தக்காட்சி இருந்தது. காமெடி என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட அந்த சண்டைக்காட்சியிலும், இறுதியில் நாம் ஆதிகாலமாக பார்த்து பழகிய காட்சிதான் கிளைமேக்ஸ். இதனால் மைக் டைசனுக்காக மட்டுமே திரையரங்கிற்கு வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமேதான் மிஞ்சியது.