Biggboss Kavin In Lift | பிக்பாஸ் கவின் நடிக்கும் புதிய படத்தை பற்றி வெளியான சூப்பர் அப்டேட்..
கவின் நடிக்கும் லிப்ட் திரைப்படத்தின் பிரஸ்ட் சிங்கிள் பாடலை பாடிய இரண்டு பிரபலங்கள்
பிக்பாஸ் புகழ் கவின் நடிப்பில் உருவாகும் இரண்டாவது படமான லிப்ட் . இந்த படத்தில் கவின் மற்றும் பிகில் திரைப்படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடிக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது . படம் முழுக்க முழுக்க கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் சார்ந்தாக இருக்கக்கூடும் என்று படக்குழுவினர் கூறி இருந்தனர். வினீத் வரப்ரசாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் .
சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கவின் , பின்பு பிக்பாஸ் மூலம் அனைவரின் இல்லத்திலும் ஒரு இடத்தை பெற்றார் . "நட்புன்னா என்னனு தெரியுமா" படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் . படம் நினைத்தபடி சரியான வெற்றி பெறவில்லை , அதனால் தனது இரண்டாவது படம் கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும் என்று பல கதைகளை கேட்டு பின்னர் "லிஃப்ட்” படத்தில் ஒப்பந்தமானார் .
இந்நிலையில் கவின் நடித்த சிங்கில் ஆல்பம் ஒன்று சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து இணையதளத்தை ஒரு கலக்கு கலக்கியது . "அஸ்குமாறோ" பாடல் சில நாட்கள் ட்ரெண்டிங்கில் இருந்து 11 மில்லியன் வியூஸ்களை தாண்டி வெற்றியும் பெற்றது . இதனை தொடந்து "லிப்ட்" படத்தின் அடுத்த சிங்கிள்ஸ் வெளியாகவுள்ளது என்ற செய்தி வெளிவந்தது. கொரோனா காரணமாக லிஃப்ட் படத்தின் சில பாடல் காட்சிகள் மட்டும் எடுக்கமுடியாமல் போனது இதனால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு படத்தை பற்றிய அடுத்த அப்டேட் வர தாமதம் ஆனதாக படக்குழுவினர் கூறியுள்ளனர் .
இந்தப் பாடலை நடிகர் , தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என்று பல பரிணாமங்களைக் கொண்ட சிவகார்த்திகேயன் பாடியுள்ளார் . இவருடன் இணைந்து சூப்பர் சிங்கர் மற்றும் மாஸ்டர் திரைப்படத்தின் புகழ் பூவையரும் இந்தப் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . பாடல் இன்னும் சில தினங்களில் வெளிவரும் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது .
<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">.<a href="https://twitter.com/hashtag/Lift?src=hash&ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#Lift</a> <a href="https://t.co/0SdKbLfXZY" rel='nofollow'>pic.twitter.com/0SdKbLfXZY</a></p>— Kavin (@Kavin_m_0431) <a href="https://twitter.com/Kavin_m_0431/status/1381233332134928392?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 11, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
மேலும், இந்த படத்தின் திரையரங்க உரிமை "லிப்ரா தயாரிப்பு நிறுவனம்” வாங்கியுள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி போன்ற மற்ற அப்டேட்கள் விரைவில் வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது .