“சமாளிக்க முடியல” - நடிகை கவுதமியின் மனுவில் அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை கௌதமியின் 6 வங்கிக் கணக்குகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யுமாறு வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை கௌதமியின் 6 வங்கிக் கணக்குகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யுமாறு வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் விவசாயச் சொத்தை 2016-ம் ஆண்டு ரூ.4.10 கோடிக்கு விற்றதாகவும், அதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டில்லியில் உள்ள தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையம், விவசாய நிலத்தின் வருவாய் 11 கோடியே 17 லட்சம் என மதிப்பீட்டு உத்தரவு பிறப்பித்து. அதன் அடிப்படையில், ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டள்ளதை நீக்க வேண்டும் என்று கெளதமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
நடிகை கெளதமி 4.10 கோடிக்கு ரூபாய்க்கு விற்ற சொத்து மதிப்பிற்கு, வருமான வரித் துறை ரூ.11.17 கோடியாக மதிப்பிடப்பட்டிருத்தை முறையீடு செய்திருந்தார். இது தொடர்பாக நடிகை கெளதமி முன்வைத்த வழக்கு கோரிக்கையில், 2016-17 மதிப்பீட்டு ஆண்டில் ரூ.34.88 லட்சம் வருமானத்தை ஒப்புக்கொண்டதாகவும், வட்டியுடன் சேர்த்து ரூ.9.14 லட்சத்தை வரியாக செலுத்தியதாகவும் கூறினார். வருமான வரி தாக்கல் செய்யும் போது, அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புக்காக அவரது வரி ஆலோசகர் மின்னஞ்சல் முகவரியை கொடுத்துள்ளார். ஆனால், அவர் கொரோனா தொற்று காரணமாக இறந்த பிறகு, கெளதமி தனது மின்னஞ்சல் முகவரியை 2020-21 முதல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்.
இதற்கிடையில், அவர் தனது வீட்டை ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலையில் இருந்து சென்னை நீலாங்கரைக்கு மாற்றியுள்ளார். சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திடீரென்று செப்டம்பர் 26, 2021 அன்று டெல்லி வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து, ஆழ்வார்பேட்டையில் தன் பெயரில் ஒரு கடிதம் வந்திருக்கிறது.
அதில், கெளதமி சொத்தை ரூ.11.17 கோடி விற்பனை செய்திருப்பதாகவும், அதன் விலை பணவீக்க குறியீட்டுடன் அடிப்படையில் ரூ.6.77 கோடி மூலதன ஆதாயத்திற்கான வரியை செலுத்த வேண்டும் என்றும் வருமான வரித் துறை வலியுறுத்தி உள்ளது. இதற்காக கெளதமியில் ஆறு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கெளதமி “எனது வங்கிக் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டது துயரம் மிகுந்தது. எனது உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பல கடமைகள் எனக்கு இருப்பதால், எனது வங்கிக் கணக்கை முடக்குவதை நிறுத்த வேண்டும்” என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டாபாணி, மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு, நடிகை கௌதமியின் முடக்கப்பட்ட கணக்குகளை விடுவிக்கும்படி வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்