LGM First Single: தோனி தயாரிக்கும் படத்தின் புதிய அப்டேட்... உற்சாகத்தில் ரசிகர்கள்.. என்ன தெரியுமா?
சினிமாவில் கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் முதல் தயாரிப்பான ‘லெட்ஸ் கெட் மேரிட்’படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சினிமாவில் கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் முதல் தயாரிப்பான ‘லெட்ஸ் கெட் மேரிட்’படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வரும் தோனி, கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். இதற்காக தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக தமிழில் தான் படம் தயாராகிறது. கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது. ஹரிஷ் கல்யாண்,இவானா, நதியா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். “Lets Get Married” என பெயரிப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியானது. இதில் மோதிரம் ஒன்றிற்குள் நதியா, ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டரை தோனி வெளியிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடிய போட்டிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் 15 ஆம் தேதி வெளியாகும் “சலானா” என தொடங்கும் பாடலின் வரிகளை மதன் கார்கி எழுதியுள்ளார். ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களை கவரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
காதலை மையமாக வைத்த காமெடியான காட்சிகளை கொண்ட படமாக இது உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் தாயாக நதியா நடித்துள்ளார். படம் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ரசிகர்களிடையே இப்போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.