Squid game update: ஸ்குவிட் கேம் சீசன் 2: டைட்டானிக் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ?
பிரபல ஹாலிவுட் நடிகர்கள் யாரேனும் ஸ்பிரிட் கேம் சீசன் 2வில் கலந்து கொள்கிறார்களா என்ற கேள்விக்கு, லியோனார்டோ டிகாப்ரியோ சீசன் 2 வில் கலந்து கொள்ளவில்லை என்று ஸ்குவிட் கேம் இயக்குனர் கூறியுள்ளார்
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் நெட்ஃபிளிக்ஸ் தயாரித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரபல ஸ்குவிட் கேம் வெப் சீரிஸின் இயக்குநர் அடுத்த சீசன்களின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர்கள் யாரேனும் ஸ்பிரிட் கேம் சீசன் 2வில் கலந்து கொள்கிறார்களா என்ற கேள்விக்கு, பிரபல நடிகர்கள் யாரும் சீசன் 2 வில் கலந்து கொள்ளவில்லை. தற்போதைக்கு அந்த பிளான் இல்லை ஒருவேளை அப்படி இருக்குமானால் சீசன் 3 யில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் சீசன் 2 கொரியாவில் படமாக்கப்படுவதாகவும் பிரபல நடிகர் லியானர்டோ டிகேப்ரியோ ஸ்குவிட் கேமின் மிகப்பெரிய ரசிகர் என்று கூறியுள்ளார். வருங்காலத்தில் அவரை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
சீசன் 2 குறித்து ஹாங் டாங் கூறுகையில், அடுத்த ஆண்டு 2023 இல் ஸ்குவிட் கேம் சீசன் 2 படப்பிடிப்பு ஆரம்பிக்க இருப்பதாகவும், 2024 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளதாகவும் தெரிவித்தார். உருவாக இருக்கும் புதிய சீசனில் ப்ரொடக்ஷன் பட்ஜெட் அதிகம் என்றும் கூறியுள்ளார்.
ஸ்குவிட் கேம் :
இந்தியாவில் ஊரடங்கிற்கு பிறகு ஓடிடி தளங்களில் வெளியாகும் மணி வெப்சீரிஸ்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்தியாவில் நடப்பாண்டில் இரண்டு வெப் சீரிஸ் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அவற்றில் ஒன்று மணி ஹைஸ்ட். மற்றொன்று ஸ்குவிட் கேம். உலகளவில் இந்த இரண்டு வெப் சீரிஸ்கள் ரசிகர்கள் மத்தியில் எது சிறந்த வெப்சீரிஸ் எனும் போட்டி நடக்கும் அளவிற்கு இந்த இரண்டு வெப்சீரிஸ்களும் வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு வெப்சீரிஸ்களும் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியானது.
jung ho-yeon get behind me!!!#Emmys2022 @TelevisionAcad pic.twitter.com/yvnlbMBcIT
— GIPHY Pop (@GiphyPop) September 13, 2022
கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியானது ஸ்குவிட் கேம். லி ஜங் ஜே. பாரக் ஹா சூ, வி ஹா ஜூன், ஹோயோங் ஜங், ஓ யூங் சூ, ஹூ சங் டே, கிம் ஜூ ரூங் மற்றும் இந்தியாவை சேர்ந்த அனுபம் திரிபாதி ஆகியோர் இதில் நடித்துள்ளனர். கடுமையான பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் 456 பேர் விளையாடும் ஒரு வித்தியாசமான விளையாட்டுதான் ஸ்குட் கேமின் திரைக்கதை. இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய் 45.6 பில்லியன் பரிசுத்தொகையை வெல்வார்கள்.
பலராலும் நிராகரிக்கப்பட்ட பிறகே ஸ்குவிட் கேம் திரைக்கதையை வெப் சீரிசாக அதன் இயக்குனர் இயக்கினார். இந்த வெப்சீரிஸ் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த சீரிஸின் அடுத்த பாகங்கள் தொடர்பாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில், இந்த சீரிசின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்கள் உருவாகும் என்று அதன் இயக்குனர் ஹாங் கூறியிருப்பதாவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.