மேலும் அறிய

Leo Telugu Poster: சண்டை செய்யாதீங்க அமைதியா இருங்க... வெளியான லியோ போஸ்டர்.. குஷியில் விஜய் ரசிகர்கள்!

லியோ தெலுங்கு போஸ்டர் எனத் தெரிவிக்கப்பட்டு இந்த போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், “அமைதியாக இரு, போரைத் தவிர்” (Keep Calm and Avod Battle) எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

லியோ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

லியோ அப்டேட் வாரம்

விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள லியோ படம் அக். 19ஆம் தேதி வெளியாக உள்ளது. வெளியீட்டுக்கு சுமார் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பட அப்டேட் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்குநாள் ரசிகர்கள் மத்தியில் எகிறி  வருகின்றன.

இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் லியோ படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. லியோ தெலுங்கு போஸ்டர் எனத் தெரிவிக்கப்பட்டு இந்த போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், “அமைதியாக இரு, போரைத் தவிர்” (Keep Calm and Avod Battle) எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

வெளியான புதிய போஸ்டர்

இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்த நான்கு நாள்களுக்கு வரிசையாக லியோ போஸ்டர்கள் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ள நிலையில், இந்த போஸ்டரைப் பகிர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ, “லியோ போஸ்டர்கள் மூலமாக கதைகள் வெளிவரும். பாத்துக்கோங்க”  எனவும் தெரிவித்துள்ளது.

அனைத்து போஸ்டர்களும் வெளியானவுடன், லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்த 30 நாள்களுக்கும் லியோ படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதற்கான திட்டத்தை தெளிவாக வகுத்துள்ளதாகவும், படக்குழுவும் முழு உற்சாகத்துடன் இதற்காக தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. லியோ படபூஜை தொடங்கியபோதே வெளியீட்டுத் தேதியை அறிவித்து அதற்காக ஒட்டுமொத்த குழுவும் முழுமூச்சாக உழைத்து கடந்த ஜூலை மாத மத்தியில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விஜய், த்ரிஷா இருவரும் ஐந்தாம் முறையாகவும் வெகுநாள்களுக்குப் பிறகும் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், சஞ்சய் தத் அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஸ்கின், சாண்டி, ஜோஜூ ஜார்ஜ், மேத்யூ தாமஸ் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே நா ரெடி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் லியோ இசை வெளியீட்டு விழாவை எதிர்பார்த்து காத்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget