Leo Second Look: வாயில் சிகரெட்... பறந்து பறந்து நடனம் ஆடும் விஜய்... லியோவின் நா ரெடி பாடல் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு
Leo First Single: நடிகர் விஜய் இன்று தன் 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாட்டி வரும் நிலையில், ஆல்டர் ஈகோ நா ரெடி பாடல் இன்று மாலை 6.30 மணிக்கும் வெளியாகிறது.
லியோ படத்தின் 'நா ரெடி' பாடல் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் விஜய் மீண்டும் கூட்டணி வைத்துள்ள திரைப்படம் ‘லியோ’.
இப்படத்தின் ஐந்தாவது முறையாக த்ரிஷா விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், ஜோஜூ ஜார்ஜ், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டியன் என பல மொழி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.
அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில், இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான நா ரெடி வெளியாக உள்ளது. விஜய் தன் 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் இணையத்தில் ஹாஷ்டேகுகள் ட்ரெண்ட் செய்தும், விஜய் மக்கள் இயக்கத்தினர் ரத்த தானம், அன்ன தானம் என செயல்பட்டும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று முதல் பாடலான நா ரெடி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் நிலையில், இப்பாடலின் டீசர் நேற்று முன் தினம் இணையத்தில் வெளியானது. தொடர்ந்து நேற்று (ஜூன்.22) நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
மேலும் வாயில் சிகரெட் உடன் விஜய் இருக்கும் நா ரெடி பட போஸ்டர் ஒன்றும் நேற்று முன் தினம் வெளியான நிலையில், இப்போஸ்டர் ஒரு பக்கம் வரவேற்பையும் மறுபுறம் விமர்சனங்களையும் பெற்றது.
இந்நிலையில், தற்போது நா ரெடி பாடலின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரிலும் வாயில் சிகரெட் உடன் விஜய் தோற்றமளிப்பதுடன், நூற்றுக்கணக்கான டான்சர்கள் சூழ விஜய் நடனமாடுகிறார்.
#LEOFirstSingle #NaaReady song will be out at 6:30PM! #Leo 🔥🧊 pic.twitter.com/CrFKhgJqJu
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 22, 2023
இந்நிலையில் இப்பாடலின் போஸ்டர் இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது. அனிருட் இசையில் விஜய்யே இப்பாடலைப் பாடியுள்ள நிலையில், டீசரில் இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்’ எனும் வாசகம் இடம்பெற்றது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. விஷ்ணு எடவன் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
மேலும், நா ரெடி தான் வரவா, எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா எனும் இப்பாடலின் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.