LEO Release LIVE : லியோ படம் சுமாரா? சூப்பர் டூப்பரா? மக்களின் கருத்து என்ன?
LEO Release LIVE Updates: லியோ திரைப்படம் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.

Background
மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக மீண்டும் இணைகிறது என்ற தகவல் வந்தவுடன் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது. அதன் பின், படத்தின் பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. முதல் கட்ட படப்பிடிப்பிற்காக அப்படக்குழு காஷ்மீர் சென்று இருந்தது. இதனையடுத்து விஜய்யுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற பட்டியல் வெளியானது. முதலாவதாக, விஜய்யுடன் 4 படங்களை நடித்த திரிஷா இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வந்தது.
அதன் பின், அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், அனுராக் காஷ்யப், கெளதம் மேனன், மிஷ்கின், பாபு ஆண்டனி, மன்சூர் அலி கான் ஆகியோர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வந்தது.
இதனை தொடர்ந்து, டைட்டில் ரிவீல் வீடியோ, ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், கதை சொல்லும் ஸ்பெஷல் போஸ்டர்கள், ட்ரெய்லர், மூன்றாவது சிங்கிள் ஆகியவை அடுத்தடுத்து வெளியானது
படப்பிடிப்பு முடித்த கையுடன் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளில் லியோ படக்குழு தீவரம் காட்டியது. பிரபல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, சமூக வலைதளத்தில் படம் குறித்து பதிவிடுவது, போஸ்டர்களை பொது போக்குவரத்து வாகனத்திலும் வாகனம் நிறுத்தும் இடத்திலும் ஒட்டுவது, மக்கள் கூடும் இடத்தில் படக்காட்சிகளை திரையிடுவது, ட்ரெய்லரை திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் திரையிடுவது, ஸ்பாட்டிஃபையுடன் இணைந்து விளம்பரம் செய்வது என தீயாய் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.
முன்னதாக, லியோவின் பிரிமீயர் காட்சி, 18 ஆம் தேதியன்று திரையிடப்படலாம் என கமலா சினிமாஸ் பதிவிட்டது. ஆனால், இது குறித்த அப்டேட் எதுவும் வரவில்லை. 18 ஆம் தேதி படம் வெளியாகாது, என்று தெரிந்தவுடன் 19 ஆம் தேதியன்று அதிகாலை சிறப்பு காட்சி இருக்கிறதா? என்ற கேள்வி வந்தது. 4 மணி காட்சிக்கு அனுமதி தரமுடியாது என அரசு உத்தரவிட்ட பின், லியோ தயாரிப்பு நிறுவனம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றமும் 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. 7 மணி காட்சி குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது. தற்போது, லியோ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என உள்துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
அரசாணையின்படி நாளை முதல் அக்டோபர் 25 வரை லியோ படத்துக்கு 9 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாலை, இரவு நேர கட்சிகளுக்காக தியேட்டர் முன் குவியும் ரசிகர்கள்
லியோ படத்தின் மாலை மற்றும் இரவு நேர காட்சிகளுக்காக திரையரங்கில் அதிக ரசிகர்கள் குவிவார்கள என்று எதிர்பார்க்கப்படுகிறது.






















