மேலும் அறிய

LEO Release Fans Celebration: ‘லியோ’ ரிலீஸ்....திருச்சியில் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி கொண்டாட்டம்

திருச்சியில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியானது, ரசிகர்கள் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி கொண்டாட்டம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம்மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து்ளளது. இதற்கு முன்பு வெளியான படத்தின் அப்டேட்கள், பாடல்கள் மற்றும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காலை 4 மணி காட்சிகள் கேட்டு பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடினாலும் அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. அதேபோல் காலை 7 மணி காட்சி கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தபோதும் அதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில், இன்று லியோ படம் வழக்கமாக காலை 9 மணிக்கு  காட்சி திரையிடப்பட்டது. 

லியோ கடந்த சில வாரங்களாக பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். புகைபிடிப்பதை ஊக்குவிப்பது தொடர்பாக படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விமர்சித்த நிலையில், டிரெய்லரில் விஜய் கெட்டவார்த்தை பேசியது தொடர்பக பெரும் சர்ச்சை வெடித்தது. இதற்கிடையில், படத்தின் ப்ரீ-புக்கிங் மட்டும் சுமார் 34 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

LEO Release Fans Celebration:  ‘லியோ’ ரிலீஸ்....திருச்சியில் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி கொண்டாட்டம்

இதன் மூலம் ஜெயிலரின் முதல் நாள் வசூலை முறியடித்து இப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் வீடியோ திரைப்படம் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து நடனமாடி கொண்டாடினர்.  இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா- மீனா திரையரங்கில் நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து நடனம் ஆடி தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். பின்பு படம் பார்க்க வரும் ரசிகர்களை முழுமையாக சோதனை செய்து அவர்களை திரையர அரங்கிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்னதாக திரையரங்கம் வெளியே நடனமாடிய விஜய் ரசிகர்களிடம் திரையரங்கில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் நடனம் ஆடக்கூடாது என கட்டுப்பாடு விகித்தனர். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் ரசிகர்களிடம் கேட்டபோது.. லியோ திரைப்படத்திற்கு மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது தவறு. விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் , சர்ச்சைகள் தான் லியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. நிச்சயமாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று நம்பிக்கை உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?

17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா

IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?

ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?

IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!

Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!

Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!

Embed widget