Leo First Review: லியோவில் அதிக வன்முறை காட்சிகள்; குழந்தைகள் வர வேண்டாம் - வெளிநாட்டு விநியோகஸ்தர் வேண்டுகோள்
லியோ படத்தில் அதிகளவு வன்முறை காட்சிகள் இருப்பதால் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் படத்தை பார்க்க வேண்டாம் என வெளிநாட்டு விநியோக உரிமையை கைப்பற்றிய நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leo First Review: லியோ படத்தில் பல இடங்களில் வன்முறை காட்சிகள் இருப்பதால் குழந்தைகள் பார்க்க முடியாது என அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக வன்முறை:
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள லியோ படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
வரும் 19ம் தேதி லியோ படம் ரிலீசாக உள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சென்னை மற்றும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதால் குழந்தைகள் படத்தை காண வேண்டாம் என லியோ படத்தை வெளிநாடுகளில் விநியோகிக்கும் உரிமத்தை பெற்ற அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுடன் வர வேண்டாம்:
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்ட தகவலில், லியோ படத்தின் வன்முறை காட்சிகள், கொடூரமான காட்சிகள் இருப்பதால் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் படத்தை பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
லியோ படத்தில் உள்ள கொடூர காட்சிகளை நீக்கினால் அது படத்தை பாதித்து விடும் என்பதால், காட்சிகளை நீக்க முடியவில்லை என்றும், குழந்தைகள் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்தாலும் பெற்றோர் லியோ படத்தை பார்க்க குழந்தைகளுடன் வர வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படத்தில் அதிகளவில் வன்முறை காட்சிகள் இருப்பதால், படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டாம் என அஹிம்சா என்டர்டெய்ன்ட்மெண்ட் நிறுவனம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#LEO is a 100% Lokesh Kanagaraj film — intensely raw and violent. Strictly for ages 15+. We've decided against a 12A version to stay true to the film's intent. pic.twitter.com/ewdflT2daX
— Ahimsa Entertainment (@ahimsafilms) October 12, 2023
முன்னதாக லியோ படத்தில் இடம்பெற்றிருந்த நான் ரெடி தான் பாடல் போதைப்பழகத்தையும் வன்முறை காட்சிகளையும் ஆதரிப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. அதை தொடர்ந்து வெளியான லியோ படத்தின் டிரெய்லரில் ஆபாச வார்த்தை இடம் பெற்றிருந்ததும் சர்ச்சையானது.
மேலும் படிக்க: Actress Abarnathy: சினிமாவில் என்ன 'கிழிக்க' போகிறாய்? .. நடிகை அபர்ணதியை கேள்வி கேட்டவருக்கு ஏற்பட்ட நிலைமை..!





















