மேலும் அறிய
Advertisement
Bigg Boss 7 tamil: சாப்பாட்டால் நடந்த கலவரம்.. பிக்பாஸை திட்டிய பூர்ணிமா.. 11 ஆம் நாளில் நடந்தது என்ன?
Bigg Boss 7 tamil : ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஏழாவது நபராக ஒருவரை அனுப்பவில்லை என்றால் எந்த வேலையும் செய்யமாட்டோம் என ஸ்ட்ரைக் செய்ய அதை வைத்து பெரிய கலவரமே நடந்துவிட்டது.
பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் 11வது நாளான நேற்று ஒரே பரபரப்பாக இருந்தது. சாப்பாட்டை வைத்து ஒரு பெரிய கலவரமே ஆகிவிட்டது.
விசித்திரா போட்ட பிள்ளையார் சுழி:
விசித்திரா ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை போய் குறை சொல்லியதால் இன்று ஆரம்பித்தது பிரச்சினை. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா மாயா என கேட்டது முதல் ஏன் கிச்சனை இவ்வளவு அசிங்கமா வைச்சு இருக்கீங்க. நீங்களும் பொண்ணுங்க தானே என சொன்னது பிரச்சினைக்கு மேலும் தூபம் போடுவது போல பெரிசாக வெடித்தது.
தொடங்கிய ஸ்ட்ரைக்:
இதன் எதிரொலியாக ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த ஆறு பேரும் எங்கள் ஆறு பேரால் எல்லா வேலையையும் மேனேஜ் செய்ய முடியவில்லை. அதனால் ஒருத்தரை ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் அனுப்புங்க அவங்க வந்து கிளீனிங் வேலை செய்து விட்டு போகட்டும். அப்படி ஏழாவது நபர் வரவில்லை என்றால் நாங்கள் இன்று எந்த வேலையும் செய்யமாட்டோம் என ஸ்ட்ரைக் செய்கிறார்கள்.
லிமிட்டை தாண்டிய பிரதீப்:
கண்டென்ட்டுக்காக தான் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்ட்ரைக் செய்தார்கள். ஆனால் அது கொஞ்சம் ஓவராக போய்விட்டது. இன்னைக்கு பிரதீப் கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டார். பிக் பாஸ் வீட்டில் சமைப்பது உன்னுடைய வேலை என்றால் அதை செய்து தான் ஆகவேண்டும். செய்யமுடியாது என சொல்லக்கூடாது. இது பெரிய விவாதமாகவே மாறியது.
மளிகை சாமானால் எழுந்த சர்ச்சை:
குரூப்பிஸம் சேர்ந்து ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களும் சண்டையிட்டது இன்றைய எபிசோட் முழுவதும் இழுபறியாகவே இருந்தது. மளிகை சாமான்களை கொடுக்க முடியாது என பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களும் பிரிஜ் கிளீனிங் செய்யப்போகிறேன் என சொல்லி சிக்கனை எடுத்து வெளியே பிரதீப் போட்டதும் அடாவடித்தனத்தை உச்சக்கட்டம். அதற்கும் மேல் பல அநாகரீகமான வார்த்தைகளும் இரு தரப்பு வீட்டிலும் இருந்து வந்தது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.
ஏத்திவிட்ட ஸ்மால் பாஸ்:
பூர்ணிமா இரண்டு பக்கமும் வேஷம் போடுவது அப்பட்டமாக தெரிகிறது. இங்கே இருப்பதை அங்கே போய் சொல்வதும் அங்கே இருப்பதை இங்கே வந்து சொல்வதையும் சரியாக கணித்து விடுகிறார் விசித்திரா. இந்த ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை ஸ்மால் பாஸ் தான் ஏத்திவிடுகிறார். அவர் ஸ்மால் பாஸாக இல்லாமல் சல்லி பாஸாக மாறிவிட்டார்.
ஏத்திவிட்ட ஸ்மால் பாஸ்:
பூர்ணிமா இரண்டு பக்கமும் வேஷம் போடுவது அப்பட்டமாக தெரிகிறது. இங்கே இருப்பதை அங்கே போய் சொல்வதும் அங்கே இருப்பதை இங்கே வந்து சொல்வதையும் சரியாக கணித்து விடுகிறார் விசித்திரா. இந்த ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை ஸ்மால் பாஸ் தான் ஏத்திவிடுகிறார். அவர் ஸ்மால் பாஸாக இல்லாமல் சல்லி பாஸாக மாறிவிட்டார்.
இந்த ஸ்ட்ரைக் மதியத்துடன் முடிந்து விட்டால் நன்றாக இருந்து இருக்கும் ஆனால் அது நாள் முழுக்க இழுத்தது சலிப்பை தட்டியது. ரவீனா மணி ரிலேஷன்ஷிப்பை வெளிப்படையாக அனைவருமே கேட்டு அவர்களை சங்கடப்படுத்திவிட்டார்கள்.
விக்ரம் எடுத்த ஸ்டாண்ட்:
சரவண விக்ரம் ஒரு கேப்டனாக இரு வீட்டாருக்கும் மத்தியில் மாட்டிகிட்டு முழிக்கிறார். ஸ்ட்ராங்காக ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் தவிக்கிறார். பிக் பாஸிடம் இந்த ஸ்ட்ரைக் பிரச்சினை குறித்து பேசினாலும் பிக் பாஸிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் விக்ரம் ஒரு முடிவாக நீங்கள் அனைவரும் ஸ்ட்ரைக்கிலேயே இருங்க. இரண்டு வீட்டில் இருப்பவர்களுக்கும் நானே சமைத்து கிளீனிங் வேலையையும் செய்கிறேன் என சொல்லி கேப்டன் விக்ரம் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார்.
ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்களும் எங்களுக்கு தேவையான ஒரு ஆள் வந்தாச்சு அதனால் நாங்கள் சமைக்கிறோம் நீங்கள் மற்ற வேலைகளை பாருங்கள் என சுமுகமாக ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வருகிறார்கள்.
ஒரு நீண்ட எபிசோடாக பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் 11வது நாள் கடந்தது.
ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்களும் எங்களுக்கு தேவையான ஒரு ஆள் வந்தாச்சு அதனால் நாங்கள் சமைக்கிறோம் நீங்கள் மற்ற வேலைகளை பாருங்கள் என சுமுகமாக ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வருகிறார்கள்.
ஒரு நீண்ட எபிசோடாக பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் 11வது நாள் கடந்தது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion