மேலும் அறிய

LEO BTS Video: உறைபனியில் துள்ளிக் குதித்தோடும் விஜய்... காஷ்மீரில் நிறைவடைந்த ’லியோ’ படப்பிடிப்பு... வீடியோ பகிர்ந்த லோகேஷ்!

நடிகர் விஜய் ஷூட்டிங் தளத்தில் துள்ளிக் குதித்தோடும் காட்சிகளும், காஷ்மீரில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் விஜய் உரையாடும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்று விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளன.

விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள ’லியோ’ படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ’லியோ’ படப்பிடிப்பு தள காட்சிகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது.

காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவு

’லியோ’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், 50 நாள்களைக் கடந்து காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார். 

தனது ட்வீட் உடன் வீடியோ ஒன்றையும் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள நிலையில், பனி, குளிர், மழை, இரவு, பகல் பார்க்காமல் மைனஸ் 6 டிகிரி முதல் மைனஸ் 20 டிகிரி வரையிலான கடுங்குளிரில் படக்குழுவினர் முழுவீச்சில் ஷூட்டிங்கில் ஈடுப்பட்டுள்ள காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

நடிகர் விஜய்யின் 68ஆவது படமான லியோ படத்தில் த்ரிஷா, நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், நடிகை ப்ரியா ஆனந்த் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள நிலையில், முதற்கட்ட காஷ்மீரில் நடைபெற்று முடிந்துள்ளது.

உறைய வைக்கும் பனியில் படப்பிடிப்பு

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கும் நிலையில்,  மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவு சண்டைப்பயிற்சியாளராகவும், தினேஷ் மாஸ்டர் நடன இயக்குநராகவும் பணியாற்றுகிறார். 

இந்நிலையில் ப்ரொடக்‌ஷன், கேமரா,  ஆடை வடிவமைப்பு, ஸ்டண்ட் என படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் அனுபவங்கள், சிரமங்கள் என அனைத்தையும் இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளனர்.

மேலும் இறுதியாக நடிகர் விஜய் ஷூட்டிங் தளத்தில் துள்ளிக் குதித்தோடும் காட்சிகளும், காஷ்மீரில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் விஜய் உரையாடும் காட்சிகளும் இடம்பெற்று விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளன.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற உள்ளதாகக் கூறப்படும் நிலையில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்.சி.யூ படமா?

‘விக்ரம்’ படத்தின் வரிசையில்  ‘லியோ’ திரைப்படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனப்படும் எல்.சி.யூவின் ஒரு அங்கமாக இருக்கும் என முன்னதாககத் தகவல்கள் வந்த நிலையில், இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இன்று மதியம் படக்குழுவினர் அனைவரும் சென்னை கிளம்பியதாகக் கூறப்படும் நிலையில், விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில், வட இந்திய மாநிலங்களில் இதன் தாக்கம் உணரப்பட்டது. இதனையடுத்து தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக லியோ படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். 

முன்னதாக இயக்குநர்கள் கௌதம் மேனன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரது பிறந்தநாளும் படப்பிடிப்புத் தளங்களில் கொண்டாடப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget