Nedumudi Venu Death: பிரபல குணசித்திர நடிகர் ‛நெடுமுடி வேணு’ காலமானார்!
Nedumudi Venu Passed Away: இந்தியன், அந்நியன் உள்பட பல மொழி படங்களில் 500-க்கும் அதிகமான படங்களில் அவர் நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு(Nedumudi Venu), உடல்நல குறைவால் கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 73. இந்தியன், அந்நியன் உள்பட பல மொழி படங்களில் 500-க்கும் அதிகமான படங்களில் அவர் நடித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த அவர், அக்டோபர் 10-ம் தேதி உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு (73) உடல்நலக்குறைவால் கேரளாவில் காலமானார் https://t.co/wupaoCQKa2 | #NedumudiVenu | #mollywood | #RIP pic.twitter.com/lxT29OBLG5
— ABP Nadu (@abpnadu) October 11, 2021
மலையாளம், தமிழ் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ள அவர் 3 முறை தேசிய விருதுகளையும், 6 முறை கேரள மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். பத்திரிக்கையாளராக தனது பணியைத் தொடங்கிய அவர், நாடகக் கலைஞராக பணியாற்றி பின்பு திரைத் துறையில் தடம் பதித்தார். கடைசியாக ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ’சர்வம் தாள மையம்’ படத்தில் தமிழில் நடித்திருந்தார்.
The legend is no more … Rest In Peace #NedumudiVenu sir . a kind person and a great teacher . Will miss u sir pic.twitter.com/rxSmfimQeY
— G.V.Prakash Kumar (@gvprakash) October 11, 2021
Farewell Venu uncle! Your body of work and your expertise over the craft will forever be research material for generations to come! Rest in peace legend! #NedumudiVenu pic.twitter.com/VzZ4LF49Nq
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) October 11, 2021
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்