மேலும் அறிய

Legend Saravanan in Leo: விஜய்யின் லியோ படத்தில் லெஜண்ட் சரவணனா? காஷ்மீரில் முகாமிட்டுள்ள அண்ணாச்சி..!

காஷ்மீரில் இருந்து லெஜண்ட் சரவணன் வெளியிட்டு வரும் டிவிட்டர் பதிவுகளால், அவர் விஜயின் லியோ படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

காஷ்மீரில் இருந்து லெஜண்ட் சரவணன் அடுத்தடுத்து வெளியிட்டு வரும் ட்விட்டர் பதிவுகளால், அவர் விஜயின் லியோ படத்தில் நடித்து வருகிறாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. 

காஷ்மீரில் லியோ திரைப்பட படப்பிடிப்பு:

நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 67. லியோ என்று பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொழிலதிபரும், திரைப்பட நடிகருமான லெஜண்ட் சரவணன் காஷ்மீர் சென்றுள்ளார். அதோடு அங்கிருந்து அவர் அடுத்தடுத்து பல்வேறு ட்வீட்களையும் வெளியிட்டு வருகிறார்.

”லியோ” படத்தில் லெஜண்ட் சரவணன்?

லியோ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் காஷ்மீர் பகுதிக்கு லெஜண்ட் சரவணன் சென்று இருப்பதால், அந்த படத்தில் இவரும் நடிக்கிறார் என சில தகவல் வெளியானது. சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் வைரலானது. அதற்கேற்றார் போல ”லெஜண்ட் இன் காஷ்மீர்” என அண்மையில் டிவிட்டர் பக்கத்தில் சரவணன் பதிவிட்டு இருந்தார்.

விரைவில் அப்டேட்:

அதைதொடர்ந்து தற்போது, ”காத்திருப்பு நெருங்குகிறது.. சுவாரசியமான அறிவிப்புகள் சில தினங்களில்” எனவும் சரவணன் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை தற்போது பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, லெஜண்ட் சரவணன் லியோ படத்தில் நடித்து வருவதாகவும், அதுதொடர்பான அறிவிப்பு தான் விரைவில் வெளியாக உள்ளது என தெரிவித்து வருகின்றனர்.

ஒருவேளை லியோ படத்தில் அவர் நடித்தால் என்ன மாதிரியான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்படலாம் எனவும் ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர். இந்த திரைப்படத்தில் 3-க்கும் அதிகமான வில்லன்கள் இடம்பெறுவதாக கூறப்படும் நிலையில், சரவணனும் வில்லனாக நடிப்பரோ எனவும் சிலர் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.

லியோ திரைப்படம்:

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - தயாரிப்பாளர் லலித் குமார் மீண்டும் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், நடிகர் மன்சூர் அலிகான், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, நடிகர் அர்ஜூன், இயக்குநர் மிஷ்கின் மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.  

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி  ஆகியோர் பணியாற்றுகின்றனர். முன்னதாக கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி லியோ படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது. இது படத்தில் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெறவுள்ளதை காட்டும் வண்ணம் இருந்தது. இதைதொடர்ந்து இந்த திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
Embed widget