Laabam Trailer: மறைந்த இயக்குநர் ஜனநாதனின் ‘லாபம்’ ட்ரெய்லர் வெளியானது!
நடிகர் விஜய் சேதுபதி ஏற்கெனவே தெலுங்கில் சாய்ரா நரசிம்மா ரெட்டி,உப்பென்னா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நிலையில் தற்போது லாபம் திரைப்படம் தெலுங்கிலும் அதே நாளில் வெளியாக உள்ளது.
மறைந்த இயக்குநர் ஜனநாதன் கடைசியாக இயக்கிய ’லாபம்' திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர்கள் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், சாய் தன்சிகா, ஜெகபதி பாபு, கலையரசன், ரமேஷ் திலக் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ஜனநாதன் இயக்கியிருக்கும் படம் லாபம். விஜய் சேதுபதி மற்றும் 7சி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இமான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ராம்ஜி இந்தபடத்தின் கேமிராமேனாகப் பணியாற்றியுள்ளார்.
Here is the Trailer 2 of #Laabam
— VijaySethupathi (@VijaySethuOffl) September 3, 2021
Tamil - https://t.co/WyaU5IoUiK
Telugu - https://t.co/PtNDTopGKg#LaabamFromSep9@shrutihaasan #SPJhananathan @immancomposer @KalaiActor @thilak_ramesh @vsp_productions @7CsPvtPte @Aaru_Dir @sathishoffl @proyuvraaj pic.twitter.com/UlxMtmtgFL
படத்தின் இறுதிகட்டத் தயாரிப்புப் பணிகள் நடந்துவந்த நிலையில் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து படம் தொடர்பான பணிகளும் முடங்கின. இதற்கிடையேதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படம் வருகின்ற 9 செப்டம்பர் 2021 அன்று ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கெனவே தெலுங்கில் சாய்ரா நரசிம்மா ரெட்டி,உப்பென்னா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நிலையில் தற்போது லாபம் திரைப்படம் தெலுங்கிலும் அதே நாளில் வெளியாக உள்ளது.
அடுத்தடுத்த ரிலீஸ், விஜய் சேதுபதி பிஸி!
லாபம் திரைப்படம் தனக்கு மிக முக்கியமான ஒன்று என நடிகர் விஜய் சேதுபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக மாறிவிட்டார் விஜய் சேதுபதி. கதைக்களமும் தனக்கான கதாபாத்திரமும் சரியாக இருந்தால் மட்டும் போதும் , அது எந்த இயக்குநரின் படமாக இருந்தாலும் பச்சை கொடி அசைத்து விடுகிறாராம் விஜய் சேதுபதி. தற்போது உலக புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக அசத்தி வருகிறார். ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.அதில் துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி ஆகிய நான்கு படங்களும் இந்த மாதம் வெளியாக உள்ளன. துக்ளக் தர்பார் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளர். இதில் சத்யராஜ், பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு சன் தொலைக்காட்சியிலும் , செப்டம்பர் 11-ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது. இதுதவிர விஜய் சேதுபதி, டாப்ஸி நடிப்பில் பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'அனபெல் சேதுபதி'. இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது. காமெடி ஹாரர் பிரிவின் கீழ் உருவாகியுள்ள இந்த படம் ஒடிடியில் வெளியாக உள்ளது. வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ‘அனபெல் சேதுபதி ’திரைப்படம் வெளியாக உள்ளது.
எம்.மணிகண்டன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கடைசி விவசாயி. கிராமத்து கதைக்களம் கொண்ட இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை திரையரங்கில் வெளியிடுவதா அல்லது ஒடிடி-யில் வெளியிடுவதா என்ற இழுபறி நீடித்து வருகிறது. இருந்தாலும் இந்த மாதமே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சில நம்ப தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன