Lal Salaam: வெளியானது ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ கிளிம்ஸ் வீடியோ - செம குஷியில் ரசிகர்கள்!
Lal Salaam: ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று. இவரின் மகள் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு குணச்சித்திர கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் வரும் ரஜினிகாந்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் ரஜினிகாந்த் தொழுவது, ரஜினியின் சண்டை காட்சியோடு ‘ஆட்டாதே வால்... “ ஜலாலி ஜலாலி ஜலாலி..” என்ற வார்த்தைகளோடு ஏ.ஆர்.ரஹ்மான் குரலும் இடம் பெற்றிருக்கிறது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரகாத்தஹூ’ என்ற வார்த்தையும் ஒலிக்கிறது. லால் சலாம் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகிறது.
3, வை ராஜா வை ஆகிய 2 படங்களை இயக்கியவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா. இவர் பல ஆண்டுகளுக்குப் பின் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இந்தியில் இயக்குநராக அறிமுகமாவுள்ளார். இதற்கிடையில் தமிழில் “லால் சலாம்” படத்தை இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் - விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர்.
மேலும் நிரோஷா, ஜீவிதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், தம்பி ராமையா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதேசமயம் யாரும் எதிர்பாராத விதமாக பல ஆண்டுகளுக்குப் பின் நடிகர் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் “மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவரின் கேரக்டர் அறிமுகமும் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது
லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் மொத்த ஷூட்டிங்கும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் முடிவடைந்தது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த தீபாவளியை முன்னிட்டு லால் சலாம் படத்தின் டீசர் வெளியானது. இதில் இந்து, இஸ்லாம் மக்கள் இடையே கிரிக்கெட் போட்டி மூலம் மோதல் ஏற்படுவதும், அதன் பின்னால் இருக்கும் அரசியல் பற்றியும் இப்படம் எடுத்துரைப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ரஜினிகாந்த் தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசிய நிலையில், கிரிக்கெட் வீரர் கபில்தேவ் டப்பிங் பேசும் புகைப்படங்கள் வெளியானது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் அப்பாவின் பிறந்தநாளுக்கு கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Mass machine and most magnetic magnificence of a man! Happy birthday APPA ! Here’s my humble tribute on this day from #lycaproductions @arrahman sir and us a team of underdogs 😇🧡🙏🏼🌟 https://t.co/uvH7adEGYr #LalSalaam pic.twitter.com/ZkdE1DOXc4
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) December 12, 2023
திருவண்ணாமலை பகுதியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து கிரிக்கெட்டை மையமாக வைத்து கொண்டு லால் சலாம் படத்தின் கதை எடுக்கப்பட்டுள்ளது. விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை லைகா சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவான லால் சலாம் படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் படப்பிடிப்பு பெங்களூரு, ஐதரபாத், சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றன.
கிளிம்ஸ் வீடியோவை காண..