Lal Salaam Audio Launch LIVE: எனது கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அஜித்குமார் இருக்க வேண்டும் - விஷ்ணு விஷால்
Lal Salaam Audio Launch LIVE Updates:
LIVE
Background
நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் (Lal Salaam) படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழு அறிவிப்பு ஏற்கனவே வெளியிட்டது. அதன்படி இன்று அதாவது ஜனவரி 26ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகின்றது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் களமிறங்கும் படம் “லால் சலாம்”. இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஜய், விக்னேஷ், ஜீவிதா, நிரோஷா, தம்பி ராமையா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், லிவிங்க்ஸ்டன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Celebration awaits! 🤩✨ Join us for the star-studded GRAND AUDIO LAUNCH EVENT of Lal Salaam this Friday, Jan 26 🗓️ at Sri Sairam Institute of Technology, Chennai. 📍 Get ready for another classic album from our 'Isaipuyal' AR Rahman & of course our Thalaivar's Kutty Kadhai!… pic.twitter.com/600UiDCiD4
— Lyca Productions (@LycaProductions) January 23, 2024
இப்படியான நிலையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக வரும் ஜனவரி 26 ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என படக்குழு அறிவித்ததன் அடிப்படையில் தற்போது நடைபெற்று வருகின்றது. இசைப்புயல் ரஹ்மானின் கிளாசிக் பாடல்கள் மற்றும் தலைவரின் குட்டிக்கதை கேட்க தயாராகுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Lal Salaam Audio Launch LIVE: எனது கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அஜித்குமார் இருக்க வேண்டும் - விஷ்ணு விஷால்
எனது கிரிகெட் அணியின் பயிற்சியாளராக அஜித்குமார் இருக்கவேண்டும் என ஆசைப்படுகின்றேன் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
Lal Salaam Audio Launch LIVE: சூப்பர் ஸ்டார் மிகப்பெரிய மனிதர் - விக்ராந்த்
ரஜினி சார் சினிமாவில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்ல... மனிதனாக மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என விக்ராந்த் தெரிவித்துள்ளார்.
Lal Salaam Audio Launch LIVE: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் மகிழ்ச்சி பொங்க நடனமாடிய ஆட்டோ ஓட்டும் பெண்கள்
லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் மகிழ்ச்சி பொங்க நடனமாடிய ஆட்டோ ஓட்டும் பெண்கள்
Thalaivar Fan Girls ...😱🔥
— PSK (@shagul_psk) January 26, 2024
Sema dance paa Vera level👌👌
Akka Rendu perum Mass panitanga 😎👏@rajinikanth #Lalsalaam #LalsalaamAudioLaunch #Rajinikanth𓃵 pic.twitter.com/b1XlABahuC
Lal Salaam Audio Launch LIVE: கே.எஸ். ரவிக்குமார் பேச்சு
லால் சலாம் படத்தில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேசியது.
Ks Ravikumar about Superstar
— Cinema Cinema (@Reyas_Cena25) January 26, 2024
(Follow has for exclusive Update about #LalSalaam | #LalSalaamAudioLaunch) pic.twitter.com/8TB1sF6xdZ
Lal Salaam Audio Launch LIVE: ஜெயிலர் மாதிரி மாஸான படத்தை கொடுத்த நெல்சனுக்கு நன்றி - கே.எஸ். ரவிக்குமார்
லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டில் பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஜெயிலர் போன்ற மாஸான படத்தினைக் கொடுத்த நெல்சனுக்கு நன்றி. அந்த படத்தில் பல்வேறு இடங்களில் புல்லரிக்கும் காட்சிகள் இருந்தது. நான் முத்து, படையப்பா போன்ற படங்கள் செய்தபோது இருந்த மாஸ் கொஞ்சம் கூட குறையாமல் கதை அமைத்து ஜெயிலர் படத்தை கொடுத்த நெல்சனுக்கு நன்றி என பேசினார்.