மேலும் அறிய

Laal Singh Chaddha: நெட்ஃப்ளிக்சில் வெளியானது அமீர்கானின் லால்சிங் சத்தா.. !

Laal Singh Chaddha: பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட "லால்சிங் சத்தா" படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கான் நடித்த படம் லால்சிங் சத்தா. கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியான இப்படம், ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் நேற்று வெளியானது. 

அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா:

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேன்க்ஸின் நடிபில் 1994 ஆம் ஆண்டு வெளியான படம் ஃபாரஸ்ட் கம்ப்.   ஹாலிவுட் திரையுலகின் க்ளாசிக் படங்களுள் ஒன்று என புகழப்படும் இப்படம், பல விருதுகளை வென்றுள்ளது. ஃபாரஸ்ட் கம்ப் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் லால் சிங் சத்தா. ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் தழுவல் என்றாலும், இந்திய மக்களுக்கேற்ப திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.  இப்படத்தை ஆத்விக் சந்தன் இயக்கியிருந்தார்.

சிறு வயது முதலே குழந்தைத்தனமான குணாதிசியம் கொண்ட லால் என்ற இளைஞனைப் பற்றியும், அவனைச் சுற்றி நடக்கும் கதையுமே லால் சிங் சத்தா. இதில், அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்திருந்தார்.  நல்ல ஸ்டோரி லைனை கொண்ட படமாக இருந்தாலும், மெதுவான திரைக்கதையாலும், சொல்ல வந்த விஷயத்தை அழுத்தமாக சொல்லாததினாலும், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. விமர்சனமும், வசூலும் கூட சறுக்கலையே சந்தித்தது. இதனால், ரிலீஸான 2 வாரங்களிலேயே படத்திற்கு வரும் மக்கள் கூட்டம் குறைந்து போனது. 

Laal Singh Chaddha: நெட்ஃப்ளிக்சில் வெளியானது அமீர்கானின் லால்சிங் சத்தா.. !

நெட்ஃப்ளிக்ஸில் லால் சிங் சத்தா

லால்சிங் சத்தா திரைப்படம் 6 மாத காலங்களுக்குள் ஓடிடி தளதில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் ரிலீஸான 8 வாரங்களிலேயே இப்படத்தின் உரிமத்தை ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் வாங்கிவிட்டது.

View this post on Instagram
 
A post shared by Netflix India (@netflix_in)

இதையடுத்து, இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிப்புகளும் வந்த வண்ணம் இருந்தது. இறுதியில், அக்டோபர் 5ஆம் தேதியான நேற்று இப்படம் வெளியானது.  இதனை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் காணலாம் என நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.

தியேட்ரிக்கள் ரிலீஸின் போது இப்படத்தை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள், வீட்டில் உட்கார்ந்து ரிலாக்ஸாக இப்படத்தைப் பார்க்கும் போது கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படம் வெளியாவதால், தென்னிந்திய ரசிகர்களும் இந்த படம் நிச்சயமாக பிடிக்கும் என திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget