24 மணிநேரத்தில் ஒரு மில்லியன் சாதனை படைத்த யாமிலி யாமிலியா பாடல்..
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் லாபம் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்கள் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்திருக்கும் படம் "லாபம்". ஜெகபதி பாபு, தன்ஷிகா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அண்மையில் உடல்நலக்குறைவால் காலமானதால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படத்தின் பின்னணி வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் முதல் சிங்கிள்ஸ் ’யாழா யாழா’ வெளியாகி 3 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றன. அடுத்த சிங்கிளான ’யாமிலி யாமிலியா’ பாடல் வெளியான 24 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
இப்படம் முழுக்க முழுக்க அரசியல், விவசாயம் குறித்து பேசும் படமாக இருக்கும். மிகவும் அழுத்தமான அரசியல் வசனங்களுடன் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் .