Kushboo : சொன்ன கதையே வேற... ஏன் ஒத்துக்கிட்டேன்னு இப்போ தோணுது... 'அண்ணாத்த' படத்தில் ஏமாந்த குஷ்பூ
Kushboo : நடிகை குஷ்பூ 'அண்ணாத்த' படத்தில் நடிக்க சம்மதம் சொன்னதால் அவருக்கு நடந்த ஏமாற்றம் என்ன?
தமிழ் சினிமாவின் ஆல் டைம் அழகியாக வலம் வருபவர் நடிகை குஷ்பூ. 90 காலகட்டத்தில் கொடி கட்டி கோயில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகையும் அவராக தான் இருப்பார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அடியெடுத்து வைத்த குஷ்பூ, வருஷம் 16 திரைப்படம் மூலம் ஹீரோயின் ஆனார். அன்று முதல் இன்று வரை அவர் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை எனும் அளவுக்கு அனைத்து பிரபலமான நடிகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டார். இன்றும் வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை மட்டுமின்றி அரசியல், பிட்னெஸ் என அனைத்து இடங்களிலும் கெத்து காட்டி வருகிறார் நடிகை குஷ்பூ. இன்றைய ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தன்னுடைய தோற்றத்தை கட்டுக்கோப்பாக மெயின்டைன் செய்து வருகிறார்.
சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு ஜாலியான நேர்காணலில் சினிமாவில் பலரை பற்றியும் பல பட வாய்ப்புகளை பற்றியும் ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் 'அண்ணாத்த' படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தது பற்றின தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அண்ணாத்த படத்தை இப்போ திரும்பி பார்த்தா அந்த படம் பண்ணனுமா என தோணுது. ஏன்னா நான் அந்த படத்தில் நடிக்க ஒத்துக்கிட்ட காரணமே ரஜினி சாருக்கு அந்த படத்தில், ஜோடி கிடையாது என்பதுதான் எங்களுக்கு சொன்ன சப்ஜெக்ட். அவருக்கு ஒரு ஜோடி திடீரென தான் கொண்டு வந்தாங்க. எங்களுக்கு சொன்ன கதை படி அவருக்கு ஜோடி இல்ல என்பதால எங்களுக்கு முக்கியத்தும் இருக்கும் என நினைச்சு தான் அந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன். படத்தோட இரண்டாம் பார்ட்டில் தங்கச்சியை அவர் தேடி போகும் போது நான் ஒரு பக்கமும், மீனா ஒரு பக்கமும் போவோம். அப்படினு தான் எங்ககிட்ட கதை சொன்னாங்க.
ஒன் சைட் லவ் தான் அதனால் சின்ன ஆர்ட்டிஸ்ட் போட்டா போதும் அப்படின்னு சொல்லி சில ஆர்ட்டிஸ்ட் பேர் எல்லாம் சொன்னாங்க. இவங்கள எல்லாரையும் தான் நாங்க அப்ரோஞ்ச் பண்ண போறோம். ஏன்னா டூயட் பாடல் எதுவும் இல்ல. ஒன் சைட் லவ் அந்த பொண்ணு ரஜினி சாரை ஃபாலோ பண்ணி வர மாதிரி ஒரு கேரக்டர் அவ்வளவு தான்.
நானும் மீனாவும் கூட லொகேஷன்ல பேசிகிட்டு இருக்கும்போது எந்த ஆர்ட்டிஸ்ட் இருந்தா நல்லா இருக்கும் அப்படினு பேசிப்போம். முதலில் அது டாக்டர் கேரக்டரா இருந்துது. அதனால் அதுக்கு பொருத்தமா எந்த ஆர்ட்டிஸ்ட் இருப்பாங்கன்னு டிஸ்கஸ் பண்ணுவோம்.
திடீரென பார்த்தா ஒரு ஹீரோயின் வந்தாங்க, டூயட் பாட்டு வந்தது. மொத்தமா படத்தோட ட்ராக் மாறிப்போச்சு. அதனால் எங்களோட கேரக்டர் ஒன்னும் இல்லாம போச்சு. இடைவெளியுடன் எங்க கேரக்டர் முடிஞ்சு போச்சு. ஏன் வர்றோம் ஏன் போறோம் என ஒண்ணுமே தெரியாம போச்சு. சில நேரத்துல இது மாதிரி நடக்க தான் செய்யும் என மனசை தேத்திகிட்டோம். இருந்ததும் ரஜினி சார் கூட திரும்பவும் நடிச்சது, சிவா டைரெக்ஷன் இது எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது என்றார் குஷ்பூ.