(Source: ECI/ABP News/ABP Majha)
Kubera: பிச்சைக்காரனாக நடிக்கும் தனுஷூக்கு வில்லன்.. நாகார்ஜூனாவின் குபேரா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
Kubera - Nagarjuna: தனுஷ் ஹீரோவாக நடிக்கும் குபேரா திரைப்படத்தில் நடிகர் நாகார்ஜூனாவின் ஸ்டைலிஷான ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் பான் இந்திய படமாக உருவாகி வரும் குபேரா (Kubera Movie) திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நிலையில், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரான நாகர்ஜூனா இப்படத்தில் இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. முன்னதாக இப்படத்தில் பிச்சைக்காரன் தோற்றத்தில் நடிகர் தனுஷ் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் நாகார்ஜூனாவின் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. எப்போதும் போல் ஸ்டைலிஷாக நாகார்ஜூனா (Nagarjuna) இந்த வீடியோவில் தோன்றியுள்ள நிலையில் பணக்கட்டு, கொட்டும் மழை என சூழ விசாரணை அதிகாரி போல் காட்சியளிக்கிறார்.
First look of @IamNagarjuna sir 🔥🔥🔥 #SekharKammulasKUBERA
— Rashmika Mandanna (@iamRashmika) May 2, 2024
- https://t.co/MrwJbBOSCD@dhanushkraja @sekharkammula @jimSarbh @Daliptahil @ThisIsDSP @SVCLLP @amigoscreation @AdityaMusic @KuberaTheMovie #Kubera pic.twitter.com/AHQEzNRj2f
இந்நிலையில் இப்படத்தில் நாகார்ஜூனா நடிகர் தனுஷூக்கு வில்லனாக, அரசு அதிகாரியாக நடிப்பதாகவும், தனுஷ் பிச்சைக்காரனாக இருந்து மாஃபியா டானாக உருவெடுக்கும் ஹீரோவாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விரைவில் இப்படத்தில் நடிக்கும் ராஷ்மிகாவின் தோற்றம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையை மையப்படுத்தி உருவாகி வரும் குபேரா படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.