மேலும் அறிய

“17 வயது; ஹோட்டலில் பாலியல் தொல்லை; அம்மா மன்னிப்பு கேட்டார்” - பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்

நடிகைகள் பலரும் தாங்கள் அனுபவித்த பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து தைரியமாக தெரிவிப்பது மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக பாராட்டப்படுகிறது.

தனது இளம் வயதில் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பிரபல பாலிவுட் நடிகை தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திரையுலகில் பாலியல் தொல்லை புகார்கள் அவ்வப்போது வெளிவரும் நிலையில் சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது. நடிகைகள் பலரும் தாங்கள் அனுபவித்த பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து தைரியமாக தெரிவிப்பது மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக பாராட்டப்படுகிறது. ஆனால் ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சியாகவே அமைகிறது. 

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை குப்ரா சைட், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்துள்ளார். அவர் “ஓபன் புக்: நாட் காஃபிஸ் ஐன் மோயர்” என்ற புத்தகத்தில் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் தனக்கு 17 வயதாக இருக்கும் போது குடும்பத்தினருடன் பெங்களூருவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றிற்கு அடிக்கடி செல்வேன். இதனால் அதன் உரிமையாளர் எங்கள் குடும்ப நண்பராகி விட்டார். அவர் எனது தாயாருக்கு பண உதவி செய்ய தொடங்கிய பின் எனக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுக்கத் தொடங்கினார். 

என்னுடைய வீட்டுக்கு அடிக்கடி வருவதும், என்னுடைய அம்மா அவருக்கு சமைத்து கொடுப்பதும் நடப்பது வழக்கம். தன்னை மாமா என கூப்பிட வேண்டாம் என சொன்ன அவர், காரில் பின்னிருக்கையில் அமர்ந்து செல்லும் போது என் மீது கைகளை வைத்தார் எனவும் குப்ரா சைட் தெரிவித்துள்ளார். என் தாயின் கண் முன்னால் எனக்கு முத்தம் கொடுக்கும் அந்த நபர் ஒருநாள் ஹோட்டல் அறைக்கு அழைத்து தவறாக முயன்றார். இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தால் அனைவரையும் அழித்து விடுவேன் என மிரட்டினார். 

அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் இந்த நிகழ்வுகளால் மனவேதனையிலும், குழப்பத்திலும் தவித்தேன். பல ஆண்டுகள் கழித்து எனது தாயிடம் நடந்தவற்றை பகிர்ந்து கொண்டேன். இதைக் கேட்ட அவர் நடந்த சம்பவங்களுக்காக என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனால் நான் என் கடந்த காலத்தை நினைவில் கொள்ள விரும்பவில்லை என குப்ரா சைட் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விவகாரம் பாலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் நடிகை குப்ரா சைட்டிடம் யார் அந்த ஹோட்டல் உரிமையாளர் என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget