தனுஷ் நடிக்கும் Tere Ishq Mein படத்தில் இணைந்த கரித்தி சனோன்... ரிலீஸ் தேதியுடன் வெளியான வீடியோ
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் Tere Ishq Mein படத்தில் பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் இணைந்துள்ளார்.

தனுஷ்
நடிகர் தனுஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அடி எடுத்து வைத்தார். சோனம் கபூர் , அபே தியோல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்தார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். வெள்ளை முகம் , வாட்டசாட்டமான உடல் என பாலிவுட் நடிகர்களுக்கு என ஒரு டெம்பிளேட் இருக்க தனது நடிப்பால் தனுஷ் பெரியளவில் ரசிகர்களை கவர்ந்தார். இந்தியில் தனுஷ் நடித்த முதல் படமே 100 கோடி வசூல் ஈட்டிய நிலையில் அடுத்தபடியாக பால்கி இயக்கிய ஷமிதாப் படத்தில் நடித்தார். இந்த படம் வசூல் ரீதியாக பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அத்ரங்கி ரே திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் இந்தி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது
தேரே இஷ்க் மே
2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் படம் தேரே இஷ்க் மேன். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகியது என்றாலும் தனுஷ் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. முந்தைய பாகத்தில் சோனம் கபூர் நடித்ததைத் தொடர்ந்து இந்த பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடிக்க இருக்கிறார். இதற்கான முன்னோட்ட வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் 28 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது
Big NEWS 📢
— Praneet Samaiya (@praneetsamaiya) January 28, 2025
Dhanush collaborates with Kriti Sanon for Aanand K Rai's 'Tere Ishk Mein' #TereIshkMein teaser looks INTENSE 🔥🔥
Stars: #Dhanush, #KritiSanon
Releasing Nov 28, 2025 in #Hindi & #Tamil
Directed by #AanandLRai
Written by #HimanshuSharma
Music by #ARRahman
Lyrics… pic.twitter.com/syNGK4oRpM
இட்லி கடை
தற்போது தனுஷ் இட்லி கடை படத்தை இயக்கியுள்ளார். நித்யா மேனன் , ராஜ்கிரண் , உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மற்றொரு படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது

