Vishnu Vishal : ’துரோகம், ஏமாற்றம்... மீண்டும் தோற்றுவிட்டேன்...’ விரக்தியில் விஷ்ணு விஷால் ட்வீட்... நடந்தது என்ன?
நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்ட ட்வீட் ஒன்று அவரது ரசிகர்களிடையே பெரும் குழப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vishnu Vishal : நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்ட ட்வீட் ஒன்று, ரசிகர்களிடையே பெரும் குழப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த ட்வீட்டை அவர் டெலிட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் எப்.ஐ.ஆர் இரண்டுமே மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்பதில் லீட் ரோலில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஷ்ணு விஷாலின் ட்வீட் ஒன்று ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது ”இது போதும், மீண்டும் சோர்ந்துவிட்டேன். மீண்டும் தோற்றுவிட்டேன். மீண்டும் கற்றுக் கொண்டேன். இதுவே என்னுடைய கடைசி தோல்வியாக இருக்கட்டும். ஆனால் இது துரோகம், ஏமாற்றம் தான்" எனப் பதிவிட்டுள்ளார். இவர் இப்படி விரக்தியில் பதிவிட்டிருக்கும் ட்விட் ரசிகர்கள் இடையே பெரும் குழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ட்வீட்டைப் பார்த்த ரசிகர்கள், எந்த படம் டிராப் ஆனது என பல கேள்விகளை முன்வைத்தனர். விஷ்ணு விஷால் பதிவிட்டிருக்கும், "Its ok, i tried again, i failed again, i learnt again...that last time was a failure" என்ற ட்வீட் தற்போது நடித்து வரும் லால் சலாம் படத்தில் இருந்து விலகினாரா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி, 2010ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலுக்கு ரஜினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. 8 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் 2018ஆம் தேதி விவாகரத்து பெற்றனர்.
இதனை அடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆன நிலையில், தற்போது விஷ்ணு விஷால் போட்ட ட்வீட் ரசிகர்கள் இடைய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஜுவாலா கட்டாவை விவாகரத்து செய்ய போகிறாரா என்று விஷ்ணு விஷாலின் ட்விட்டுக்கு ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர். இப்படி விஷ்ணு விஷால் பதிவிட்ட ட்விட்டுக்கு ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியதை அடுத்து, அந்த ட்வீட்டை அவர் நீக்கியுள்ளார்.
மேலும் படிக்க