VijaySethupathi | ”உங்களை நேர்ல பார்க்கணும்” : குட்டி ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய மக்கள் செல்வன்..!
தன்னை காணவேண்டும் என்று ஆசைப்பட்ட சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து கலந்துரையாடியுள்ளார் பிரபல நடிகர் விஜய்சேதுபதி.
புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் சிறுவன் ஒருவன் தன்னை காணவேண்டும் என்று ஆசைப்படுவதை, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் வாயிலாக தெரிந்தகொண்டுள்ளார் விஜய்சேதுபதி. இந்நிலையில் அந்த சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினரை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களோடு உரையாடியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. சில நாட்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதித்த தனது ரசிகரை ஜூம் கால் மூலம் சந்தித்து பிரபல நடிகர் கமல் பேசியது குறிப்பிடத்தக்கது.
சினிமா மீது மக்கள் கொண்டுள்ள ஆர்வம் அளவுகடந்தது, ரசிகர்கள் தாங்கள் விரும்பும் நடிகர்களை சூப்பர் ஹீரோவாக பார்க்கின்றனர் என்றால் அது மிகையல்ல. அதே சமயம் நடிகர் நடிகைகளும் தங்களை புகழின் உச்சிக்கு அழைத்து சென்ற ரசிகர்களை எப்போது மறப்பதில்லை என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் சாட்சியாக நிற்கின்றது. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கோலிவுட் துவங்கி ஹாலிவுட் வரை தங்களுடைய தீவிர ரசிகர்களை மகிழ்விக்க நடிகர் நடிகைகள் பல விஷயங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் அறிமுகமான விஜய குருநாத சேதுபதி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழ்கின்றார். ஆரம்ப நிலையில் பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த விஜய் சேதுபதி தற்போது தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் 17 படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 2017-ஆம் ஆண்டு தமிழில் வெளியான மாநகரம் படத்தை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் ஹிந்தியில் ரீமேக் செய்கின்றார். அந்த படத்தின் மூலம் தனது பாலிவுட் பயணத்தை தொடங்கியுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் காந்தி டாக்ஸ் என்று ஹிந்தி படத்திலும் நடித்து வருகின்றார்.