This Week OTT release : இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்களா..? திரை விருந்திற்கு தயாராகுங்கள் ரசிகர்களே!
இந்த வாரம் எந்தெந்த மொழி படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன என்ற விவரம் வெளியாகியுள்ளது
![This Week OTT release : இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்களா..? திரை விருந்திற்கு தயாராகுங்கள் ரசிகர்களே! know the list of movies releasing in OTT this week This Week OTT release : இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்களா..? திரை விருந்திற்கு தயாராகுங்கள் ரசிகர்களே!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/2dd34c2f50a350c4e0c0bdba93f2a5e11680093924163224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மார்ச் மாதம் கடைசி வாரமான மார்ச் 31-ஆம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரம் ஏராளமான திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இந்த வாரம் ஒரே என்டர்டெய்ன்மெண்ட்டாக இருக்கப்போகிறது.
இந்த வாரம் ஓடிடி தளங்களில் 4 தமிழ் உட்பட 14 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. எந்தெந்த படங்களை எந்தெந்த தளங்களில் பார்க்கலாம் என்ற விவரம் உள்ளே.
அயோத்தி (தமிழ்) - ஜீ 5
டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், பிரியா அஸ்ராணி, புகழ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் இந்த வாரம் ஜீ 5 தலத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இதுவரையில் தமிழ் சினிமா காணாத ஒரு வித்தியாசமான திரைக்கதை. ஒரு நாளில் நடக்கும் கதையை மிகவும் விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார்கள். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம்.
அகிலன் (தமிழ்) - ஜீ 5 :
ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் சட்டவிரோதமான கடல் வழி வணிகம் சார்ந்த கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
பஹிரா (தமிழ்) - சன் நெஸ்ட்
ஆர் வி பரதன் தயாரிப்பில் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா, அமிரா தஸ்தூர், காயத்ரி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள சைக்கோ க்ரைம் திரில்லர் திரைப்படம் பஹிரா. இப்படம் சன் நெஸ்ட் தளத்தில் மார்ச் 31-ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
அரியவன் (தமிழ்) - டென்டகோட்டா
எம்ஜிபி மாஸ் மீடியா தயாரிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் இஷான், பிரனாலி கோக்ரே, டேனியல் பாலாஜி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் அரியவன். சமீப காலமாக பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நிகழ்வுகளை எதிர்த்து பெண்களுக்கு தைரியம் கொடுக்கும் வகையில் வெளியான திரைப்படம்தான் அரியவன். இப்படம் டென்டகோட்டா ஓடிடி தளத்தில் மார்ச் 31-ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஓடிடியில் வெளியாகும் மற்ற மொழி படங்கள் :
ஸ்ரீதேவி சோபன் பாபு (தெலுங்கு) - ஹாட்ஸ்டார்
அமிகோஸ் (தெலுங்கு) - நெட்ஃபிளிக்ஸ்
சாத்தி கானி இரண்டு ஏகாரலு (தெலுங்கு) - ஆஹா
அவதார் தி வே ஆஃப் வாட்டர் (ஆங்கிலம்) - பிரைம் PPV
Shehzada (ஹிந்தி) - நெட்ஃபிளிக்ஸ்
Gaslight (ஹிந்தி) - ஹாட்ஸ்டார்
KilBoksoon (கொரியன்) - நெட்ஃபிளிக்ஸ்
MurderMystery2 (ஆங்கிலம்) - நெட்ஃபிளிக்ஸ்
Unseen (ஆங்கிலம்) - நெட்ஃபிளிக்ஸ் சீரிஸ்
CopycatKiller (தைவானீஸ் ட்ராமா) - நெட்ஃபிளிக்ஸ் சீரிஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)