ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறிய லாபதா லேடீஸ்....ஆனால் அந்த ஒரு படம் இருக்கு
இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு தேர்வான இந்திப்படம் 'லாபதா லேடீஸ் ' ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது
97 ஆவது ஆஸ்கர் விருதுகள்
நடப்பாண்டிற்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் மொத்தம் 28 படங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இதில் மொத்தம் 6 தமிழ் படங்கள் இடம்பெற்றன. அந்த வகையில் மகாராஜா, கொட்டுக்காளி, ஜமா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான் ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு அனுப்பப்பட்டன. தெலுங்கில் இருந்து 3 படங்களும், மலையாளத்தில் இருந்து 4 படங்களும், ஒடியா மொழியில் இருந்து 1 படமும், இந்தியில் இருந்து 12 படங்களும், மராத்தியில் இருந்து 3 படங்களும் பரிந்துரைக்கப்பட்டன. பரிசீலனைக்குப் பின் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு தேர்வா ஒரு இந்தியப்படம் லாபதா லேடீஸ்
லாபதா லேடீஸ்
கடந்த ஆண்டு ஆமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான லாபதா லேடீஸ். திரையரங்கத்திலும் ஓடிடி தளத்திலும் பரவலான கவனத்தைப் பெற்றது. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்கிற பிரிவின் கீழ் இப்படம் இந்த திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. பிற மொழிகளில் எத்தனையோ சிறந்த படங்கள் இருந்து லாபதா லேடீஸ் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியது குறித்து மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறிய லாபதா லேடீஸ்
தற்போது சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பிரிவில் தேர்வாகியுள்ள 15 படங்களின் பட்டியலை அகாடமி விருதுகள் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருந்து லாபதா லேடீஸ் திரைப்படம் வெளியேறியுள்ளது. இப்படம் நிச்சயம் விருது வெல்லும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த பட்டியலில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்தியர்கள் நடித்த சந்தோஷ் என்கிற படம் தேர்வாகியுள்ளது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள 15 படங்கள்
Brazil, “I’m Still Here”
Canada, “Universal Language”
Czech Republic, “Waves”
Denmark, “The Girl with the Needle”
France, “Emilia Pérez”
Germany, “The Seed of the Sacred Fig”
Iceland, “Touch”
Ireland, “Kneecap”
Italy, “Vermiglio”
Latvia, “Flow”
Norway, “Armand”
Palestine, “From Ground Zero”
Senegal, “Dahomey”
Thailand, “How to Make Millions before Grandma Dies”
United Kingdom, “Santosh”
மேலும் படிக்க : நாட்டிற்கே பெருமை சேர்க்கும்...மிரண்டு போவீங்க...அடுத்த படத்தைப் பற்றி அப்டேட் கொடுத்த அட்லீ
எஸ்.கே 23 அப்டேட் வெளியிட நாள் குறிச்சாச்சு...செம மாஸான டைட்டில் டீசர் ரெடி