மேலும் அறிய

King Of Kotha Trailer: தெறிக்கவிடும் வசனங்கள்... பட்டையைக் கிளப்பும் துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ ட்ரெய்லர்!

துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் - வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இப்படத்துக்கு இசை அமைத்துள்ளனர்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையை சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான 'கலாட்டாக்காரன்' பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

கிங் ஆப் கோதா ட்ரெய்லர் 

கிங் ஆப் கோதா படத்தின் ட்ரெய்லர் சுமார் 2.34 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.  1980-களில் நடைபெறும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. ராஜு என்கிற ராஜேந்திரன் எனும் பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதை களத்தில் துல்கர் கவனம் பெறுகிறார். கால்பந்து, மாரடோனா என மலையாள சினிமாவுக்கு உரித்த சில குறியீடுகள் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன. கேங்ஸ்டர் வாழ்வில் ஏற்படும் காதல். அதன்பின் நடைபெறும் மாற்றங்கள் என கதை நகரும் என தெரிகிறது. ஆக்‌ஷன் போலவே படத்தில் செண்டிமென்டும் இருக்கும் என தெரிகிறது.

ஆக்‌ஷன் திரைப்படம்

கடந்தாண்டு வெளியான 'சீதா ராமம்' துல்கர் சல்மானுக்கு மிகப் பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் நடிப்பில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம். கேங்ஸ்டர் ஜானரில் பக்கா ஆக்‌ஷன் மூவியாக உருவாகியுள்ளது. துல்கர் சல்மானுடன் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ரித்திகா சிங், சார்ப்பட்டா பரம்பரை புகழ் 'டான்சிங் ரோஸ்' சபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிங் ஆஃப் கோதா படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் காரைக்குடி பகுதிகளில் தான் அதிகம் நடைபெற்றது. 1980களில் நடைபெறும் பீரியட் படமாக உருவாகியுள்ள 'கிங் ஆஃப் கோதா திரைப்படத்தில், நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் லீடிங் ரோலில் நடித்துள்ளார். 

இயக்குநர் மறைவு- ட்ரெய்லர் வெளியீடு ஒத்தி வைப்பு

கிங் ஆப் கோதா படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாக இருந்த நிலையில், இயக்குனர் சித்திக் மறைவையடுத்து  ட்ரெய்லர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.  பிரபல மலையாள இயக்குநர் சித்திக், 1989ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி' உள்ளிட்ட ஏராளமான படங்களை இவர் இயக்கினார். விஜய் நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியவர் சித்திக்.

இயக்குநர் சித்திக் கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று  திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Embed widget