King of Kotha: களமிறங்கிய கேங்ஸ்டர் பட்டாளம்.... மிரட்டும் துல்கர் சல்மானின் ’கிங் ஆஃப் கோதா’ முன்னோட்டம்!
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பீரியட் கேங்ஸ்டர் திரைப்படமான ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த சுவாரஸ்ய அப்டேட் வெளியாகியுள்ளது.
மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் மலையாளத் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் ஜூன் 28 ஆம் தேதி இந்தப் படத்தின் டீஸர் வெளியாகும் எனும் கூடுதல் தகவலும் வெளியாகி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகியிருக்கும் பீரியட் கேங்ஸ்டர் திரைப்படம் கிங் ஆஃப் கோதா. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டத்தைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.
Introducing the People of Kotha!
— Zee Studios South (@zeestudiossouth) June 23, 2023
Brace yourself for a first glimpse Teaser into the realm of #KingofKotha releasing on June 28 at 6 pm 😎🔥#KOK @dulQuer @actorshabeer @Prasanna_actor #AbhilashJoshiy @NimishRavi @JxBe @shaanrahman @ActorGokul @ActorSarann @TheVinothCj… pic.twitter.com/oK63FCKySa
டான்சிங் ரோஸ்
சார்பட்டாத் திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் இந்தப் படத்தில் கண்ணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் பிரசன்னா
நடிகர் பிரசன்னா இந்தப் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரத்தின் பெயர் ஷாகுல் ஹாசன் .
ஐஷ்வர்யா லக்ஷ்மி
மலையாளத்தில் மாயாநதி படத்திலும் தமிழில் ஜகமே தந்திரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகை ஐஷ்வர்யா லக்ஷ்மி, தாரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நைலா உஷா
மலையாள நடிகையான நைலா உஷா இந்தப் படத்தில் மஜ்னு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
செம்பன் வினோத்
விக்ரம் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் செம்பன் வினோத், ரஞ்சித் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வடசென்னை
வடசென்னை படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷின் சகோதரனாக நடித்த சரண், ஜினு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அனிகா சுரேந்திரன்
என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன், ரித்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிங் ஆஃப் கோதா!
இறுதியாக துல்கர் சல்மானின் பெயரை மட்டும் வெளியிடாமல் சஸ்பென்ஸ் வைத்துள்ளது படக்குழு.
டீஸர் வெளியீடு
வரும் ஜுன் 28 ஆம் தேதி கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தின் டீஸர் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.