KGF 2 Fans : கொட்டும் மழையிலும் கே.ஜி.எப்.2 படம் பார்க்க குவிந்த ரசிகர்கள்...! அதிகாலையிலே வசூல் மழை..!
KGF 2 FANS : கும்பகோணத்தில் கொட்டும் மழையிலும் கே.ஜி.எப். 2 படத்தை பார்ப்பதற்காக திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர்.
நடிகர் யஷ் நடிப்பில் உருவாகிய கே.ஜி.எப். 2 படம் உலகெங்கும் கடந்த 14-ந் தேதி வெளியாகியது. கே.ஜி.எப். படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த பாகம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும், யஷ்ஷின் நடிப்பும் படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் கே.ஜி.எப். 2 படம் மாபெரும் வசூல் வேட்டையை நடத்தி வரும் சூழலில், அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல்லாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கும்பகோணத்தில் உள்ள தனியார் தியேட்டர் ஒன்றில் அதிகாலை 4 மணிக்கு கே.ஜி.எப். 2 சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. கும்பகோணத்தில் நேற்று நள்ளிரவு முதல் கனத்த மழை பெய்து வருகிறது. காலை வரை இந்த மழை தொடர்ந்து பெய்தது.
Day 4 Early morning 4AM show goes Housefull 🔴 despite in heavy rain 🌧️!
— Vasu A/c RGB Laser Dolby 7.1 (@vasutheatre) April 17, 2022
Show no :- 17
No.of. Housefull shows :- 17 !@TheNameIsYash @SrinidhiShetty7 @hombalefilms @DreamWarriorpic @prabhu_sr @prashanth_neel#KGFChapter2 #KGF2 #KGF2InCinemas pic.twitter.com/cVuhcbQRpV
அதிகாலையில் பெய்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாத ரசிகர்கள் குடைபிடித்தபடியும், நனைந்தபடியும் கே.ஜி.எப். 2ம் பாகம் படத்தை பார்க்க தியேட்டரில் குவிந்தனர். இந்த வீடியோவை ரமேஷ் பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பீஸ்ட் படம் வெளியான மறுநாள் வெளியான கே.ஜி.எப். 2ம் பாகம் மாபெரும் வசூலைக் குவித்து வரும் சூழலில், பீஸ்ட் படம் வெளியான பல திரையரங்குகளிலும் பீஸ்ட் காட்சிகள் குறைக்கப்பட்டு கே.ஜி.எப். 2ம் பாகம் காட்சிகள் திரையிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து 3வது நாளாக அதிகாலை காட்சி திரையிடப்படுவது கே.ஜி.எப். 2ம் பாகம் படத்திற்கு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமையான நாளையும் அதிகாலை காட்சி திரையிடப்பட உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்