மேலும் அறிய

Rajinikanth: ஏழை வீட்டு உப்புக் கல்லு நானடா.. ரஜினிக்கு இப்படி ஒரு பாட்டு இருக்கா?

தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு வைரமுத்து  தான் எழுதிய பாட்டுக்கு டம்மியாக எழுதப்பட்ட வரிகள், பாட்டின் வரிகள் உருவான சூழல் போன்றவை அடங்கிய ஆயிரத்தொரு பாடல்கள் என்ற தொகுப்பை உருவாக்கி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் படத்தில் இடம்பெற்ற “அதான்டா இதான்டா” பாடலுக்காக எழுதப்பட்ட மாற்று வரிகளை கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு வைரமுத்து  தான் எழுதிய பாட்டுக்கு டம்மியாக எழுதப்பட்ட வரிகள், பாட்டின் வரிகள் உருவான சூழல் போன்றவை அடங்கிய ஆயிரத்தொரு பாடல்கள் என்ற தொகுப்பை உருவாக்கி வருகிறார். அந்த வகையில் 1997ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் படத்தில் இடம் பெற்ற பாடல் பற்றி எழுதியுள்ளார். இந்த படத்தில் ரம்பா, சௌந்தர்யா, விசு,கிரேஸி மோகன், மனோரமா, செந்தில், ஜனகராஜ், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ரகுவரன், வி.கே.ராமசாமி, வினு சக்கரவர்த்தி, நிழல்கள் ரவி,  வடிவுக்கரசி, அஞ்சு அரவிந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவா இப்படத்துக்கு இசையமைத்தார். இந்த படத்தின் கதையை ரஜினி உருவாக்கி சொந்தமாக தயாரித்திருந்தார். 

இந்த படத்தில் ரஜினியின் அறிமுகப்பாடலாக 'அதான்டா இதான்டா' அமைந்தது. மிகப்பிரமாண்டமாக இந்த பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் படத்தில்  இடம்பெற்ற 'அதான்டா இதான்டா' பாடலுக்காக எழுதப்பட்டுப் படத்தில் இடம்பெறாத மாற்றுப் பல்லவியும் சரணங்களும் ஆயிரத்தொரு பாடல்கள் தொகுப்பில் இடம்பெறுகின்றன. இந்த வரிகளை  ரசிகர்கள் அதே மெட்டில்பாடிப் பார்க்கலாம், பரவசம் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டம்மி வரிகளையும் அவர் பகிர்ந்துள்ளார். 

பாடலுக்காக எழுதப்பட்ட வரிகள்

பல்லவி

அன்புள்ள அண்ணன்டா
அருணாசலம் நான்தாண்டா
சாதிபேதம் இல்லாம
சகலருக்கும் சொந்தம்டா
ஆண்டவன் நடத்திடுவான்டா
அருணாசலம் நடந்திடுவான்டா
நான் எந்த நாளும் 
எளிமையான ஆளடா - அட
ஏழை வீட்டு உப்புக் கல்லு நானடா

சரணம் 1

எல்லா மனிதனுக்கும் 
ஓராற்றல் உண்டு – அதை
நல்லா வளர்த்துவிடு 
அடையாளம் கண்டு – அட
உதவாத பயலென்று 
எவனுமில்லை இன்று – சிறு
வேப்பம் பூவானாலும் 
தேனுண்ணும் வண்டு

பாம்புகடிச்சு இங்கே 
பொழச்சவனும் உண்டு – தன்
செருப்புக் கடிச்சு இங்கே 
செத்தவனும் உண்டு – அட
நாளை என்னாகும் என்ற 
கவலைகளை வென்று – நீ
இன்றே சுகம் கண்டு 
வாழ்வதுதான் நன்று

போதிக்கும் மனிதர்கள் 
சாதிப்பது இல்லையடா
சாதிக்கும் மனிதர்கள் 
போதிப்பது இல்லையடா

உழைக்கும் மனிதன்
அழைக்கும்போது 
தெய்வம் வருமடா
நெற்றி வேர்வை
நிலத்தில் சிந்தி
வெற்றி வெற்றி கொள்ளடா

சரணம் 2

கறையேதும் இல்லாத 
நிலவெங்கே சொல்லு? – சிறு
நுரை கூட இல்லாத
நதி எங்கே சொல்லு – அட
சதுரத்தில் முட்டையிடும் 
பறவை எதுசொல்லு – மிகச்
சரியாக வாழ்கின்ற மனிதன் 
யார் சொல்லு?

ரோஜாச் செடியென்றால் 
அதிலுண்டு முள்ளு – நீ
முள்ளோடு மோதாமல் 
ரோஜாவைக் கிள்ளு – அட
அறியாத பிழை என்றால் 
அதை விட்டுத் தள்ளு – சிறு
குறை நீக்கி நிறை கண்டு 
நெறியோடு நில்லு

இளமையில் உழைப்பவன் 
முதுமையில் சிரிக்கிறான்
இளமையில் படுத்தவன் 
முதுமையில் அழுகிறான்

விதைக்கு வைத்ததைச் 
சமைத்து உண்பவன் 
மிகவும் மூடனடா
மழைக்கு முந்தியே 
கலப்பை செய்பவன் 
எவனோ அவனே சூரன்டா

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget