கணித ஜோதிடம் என்ன சொல்லுதுன்னா.. 2023ல் தாயாகும் பிரபல நடிகை! பாலிவுட் ஜோசியரின் கணிப்பு!
2023ல் பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா தாயாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக பிரபல எண் கணித ஜோதிடர் சஞ்சய் பி ஜுமானி கணித்துள்ளர்.
2023ல் பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா தாயாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக பிரபல எண் கணித ஜோதிடர் சஞ்சய் பி ஜுமானி கணித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக கத்ரீனா கைஃபின் தாய்மை குறித்து ஏராளமான தகவல்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் நிலவி வருகின்றன. அவர் ஏற்கனவே கர்ப்பமாக இருப்பதாக சிலர் நம்புகிறார்கள். அண்மையில் தனது கணவர் விக்கி கௌஷலுடன் மாலத்தீவுக்கு செல்லும்போது அவர் அணிந்திருந்த அவரது தளர்வான ஆரஞ்சு நிற டி-ஷர்ட்டைப் பார்த்து பலரும் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். ஆனால் கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இன்னும் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இது குறித்து பாலிவுட்டில் மிகவும் பிரபலமான எண் கணித ஜோதிடர் சஞ்சய்பி ஜுமானி கூறூகையில், "கத்ரினா இப்போது தனது 40வது வயதில் இருக்கிறார். அவர் இந்த ஆண்டே தாயாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கணித ஜோதிடத்தின்படி பெரும்பாலும், அது அடுத்ததாக இருக்கும். எண் கணித முறைப்படி கத்ரினாவிற்கான எண் 7 மற்றும் 2023ஐ கூட்டினால் 7 வரும்." மேலும் கத்ரினாவின் கணவர் விக்கி கூட நம்பர் 7 தான் என்று ஜுமானி கூறுகிறார். அதேபோல், "எனவே நான் சொல்வதெல்லாம் அவரது எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளது" என்றும் ஜுமானி கூறியுள்ளார்.
அதேநேரத்தில் கத்ரினாவுக்கு பிறக்கும் குழந்தை பெண்ணா அல்லது ஆணா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று நான் கணித்த பிறகு, நான் அத்தகைய கணிப்பைத் தவிர்க்கிறேன். ட்விங்கிள் கன்னா மற்றும் கஜோல் போன்ற பலருடன் நான் சரியாகச் சொன்னேன். ஆனால் தற்போது எந்த குழந்தை என இப்போது நான் கணிப்பதை தவிர்த்து விட்டேன். வாழ்க்கையினை கணிப்பது மிகவும் எளிமையானது இல்லை" எனவும் சஞ்சய்பி ஜுமானி கூறியுள்ளார்.
ஜுமானி மேலும், "கத்ரீனாவும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தனது சினிமா வாழ்க்கையை கொஞ்சம் ஒதுக்கி வைத்து தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவார்." கத்ரீனாவும் விக்கியும் மார்ச் 19, 2022 அன்று திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு, விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா குடியேறிய அதே கட்டிடத்தில், அதாவது ஜூஹு தாரா சாலையில் அவர்கள் தங்கியுள்ளனர். இதற்கு முன், விக்கி தனது பெற்றோர்களான ஷாம் கௌஷல் மற்றும் வீணா கௌஷலுடன் ஓபராய் ஸ்பிரிங்ஸில் (அந்தேரி ஃபேம் அட்லாப்ஸ் எதிரில்) தங்கியிடுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்