Katrina Kaif: கத்ரீனா கைஃப் விக்கி கவுஷலுக்கு கொலை மிரட்டல்.. மும்பை காவல்நிலையத்தில் மர்ம நபர் மீது வழக்குப்பதிவு..
பாலிவுட் பிரபல தம்பதியான கத்ரீனா கைஃப், விக்கி கெளஷலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Katrina Kaif: கத்ரீனா கைஃப் விக்கி கவுஷலுக்கு கொலை மிரட்டல்.. மும்பை காவல்நிலையத்தில் மர்ம நபர் மீது வழக்குப்பதிவு.. Katrina Kaif Vicky Kaushal Get Death Threat On Social Media Case Filed Katrina Kaif: கத்ரீனா கைஃப் விக்கி கவுஷலுக்கு கொலை மிரட்டல்.. மும்பை காவல்நிலையத்தில் மர்ம நபர் மீது வழக்குப்பதிவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/25/2815e8019c77d31f1b1d389f7693078d1658734110_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாலிவுட் பிரபல தம்பதியான கத்ரீனா கைஃப், விக்கி கெளஷலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் தம்பதியும், முன்னணி நடிகர்களுமான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கெளசலுக்கு சமூக வலைதளம் வாயிலாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார். இது குறித்து மும்பை சாண்டகுரூஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
View this post on Instagram
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறும் போது, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வாயிலாக அவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அந்த நபர், கத்ரீனா கைஃபுற்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார்.” என்று கூறினர்.
இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதின் அடிப்படையில், சாண்டகுரூஸ் காவல்துறை அடையாளம் தெரியாத நபரின் மீது சட்டப்பிரிவு 506 , 354 -D ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அத்துடன் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகின் பிரபலமான கத்ரினா கைஃபுக்கும் நடிகர் விக்கி கௌசலுக்கும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு காதலித்த தருணங்களில், இருவரும் பல இடங்களுக்கு சென்றனர். அந்த தருணங்களிலே இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)