Katrina Kaif & Vicky Kaushal | நிச்சயதார்த்தம் முடிந்ததாம்! திருமண ஏற்பாடுகளில் பிஸியான விக்கி கௌஷல், கத்ரினா கைஃப்!
ஹர்ஷ்வர்தன் கபூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது இவர்கள் காதலித்து வருவதை ஒப்புக்கொண்டார்..இல்லை இல்லை உளறிவிட்டார்.

பாலிவுட்டின் முக்கிய நடிகர், நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர்கள் கத்ரினா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமீப காலமாக பாலிவுட்டில் கிசு கிசுக்கப்படுகிறது. ஆனாலும் அதனை இருவருமே வெளிப்படையாக இன்றளவும் பேசியதில்லை. ஆனாலும் அவர்களின் நடவடிக்கைகள் இருவருக்கும் இடையில் இருக்கும் காதலை அவ்வபோது உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. முன்னதாக காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் கத்ரினா கைஃப். அவரிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண் ஜோகர் “உங்களுக்கு யாருடன் இணைந்து நடிக்க ஆசை ?” என்ற கேள்வி எழுப்பினார். கத்ரினா விக்கி கௌஷலின் பெயரை கூறவே அரங்கம் குதூகலமானது.. அதன் பிறகு மற்றொரு எபிஷோடில் கலந்துகொண்ட விக்கி கௌஷலிடன் கரண் ஜோகர் கத்ரினாவின் ஆசையை கூறவே , உண்மையாகவா என கேட்டும் மயங்கி விழுந்தவர் போல நடித்துக்காட்டினார். அதன் பிறகு கேட்ட கேள்விக்கும் கத்ரினா கைஃப் என்றே பதிலளித்தார். இங்குதான் அவர்கள் இருவருக்குமான காதல் தொடங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது.
2019 ஆம் ஆண்டு ஸீ விருது வழங்கும் நிகழ்ச்சியில் என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்ற பாடலை கத்ரினாவை நோக்கி பாடியிருந்தார் விக்கி. அப்போது நிகழ்ச்சி கூடுதல் சுவாரஸ்யமாக இருந்தது.அதன் பிறகு பல நிகழ்சிகளில் ஜோடியாக வலம் வந்தனர் விக்கி கௌஷல் மற்றும் கத்ரினா கைஃப். 2021 புத்தாண்டு கொண்டாட்டத்தை இருவரும் தங்களது உடன் பிறப்புகளுடன் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டனர். ஒரே மாதிரியாக வெளியிட்ட புகைப்படங்கள் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. என்னதான் விக்கியும் கத்ரினாவும் ரகசியங்களை காப்பதில் வல்லவர்கள் என்றாலும், அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அப்படி இல்லை ! முன்னதாக இருவருக்கும் நெருக்கமான நண்பரான ஹர்ஷ்வர்தன் கபூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது இவர்கள் காதலித்து வருவதை ஒப்புக்கொண்டார்..இல்லை இல்லை உளறிவிட்டார்.
View this post on Instagram
View this post on Instagram
இந்த நிலையில் அவர்கள் இருவரும் விரைவில் திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவரும் தீபாவளியன்று பிரபல மேனேஜர் ரேஷ்மா ஷெட்டியின் அலுவலகத்திற்கு ஒன்றாக சென்றுள்ளனர்.
மேலும் இவர்களுக்கு தீபாவளி பண்டிகை அன்று கபீர் கான் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் சில செய்திகள் உலா வருகின்றன.பாலிவுட் பக்கம் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் இருக்கும் என தெரிகிறது. கத்ரினா கைஃப் தற்போது விளம்பர படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளாராம். விக்கி குடும்பத்துடன் இணைந்து திருமண வேலைகளில் கத்ரீனா ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

