மேலும் அறிய

Watch video : கர்ப்பமாக இருக்கிறாரா கத்ரீனா கைஃப்? லண்டனில் குழந்தை பிறக்கப்போகிறதா? வைரலாக பகிரப்படும் வீடியோ 

Watch Video : கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் ஜோடி தங்களின் முதல் குழந்தையை வரவேற்க தயாராக இருக்கிறார்கள் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

பாலிவுட் திரையுலகின் மிகவும் விரும்பப்படும் ஜோடியான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் கடந்த 2021ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் தி சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண வைபவத்தில் ஏராளமான பாலிவுட் திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி  சிறப்பித்தனர்.

இருவரும் அவரவர்களின் படங்களில் பிஸியாக இருந்து வரும் வேளையில் கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் தற்போது மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே இது போன்ற ஒரு வதந்தி 2021ம் ஆண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அது வெறும் வதந்தி என்றும் கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இல்லை என்பதையும் விக்கி கௌஷல் தெளிவு படுத்தினார். தற்போது அதே போன்ற ஒரு வதந்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. 

Watch video : கர்ப்பமாக இருக்கிறாரா கத்ரீனா கைஃப்? லண்டனில் குழந்தை பிறக்கப்போகிறதா? வைரலாக பகிரப்படும் வீடியோ 

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவரும் லண்டன் தெருக்களில் மகிழ்ச்சியாக உலா வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் கை கோர்த்து ஒன்றாக நடந்து செல்லும் வீடியோ ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு அதில் கத்ரீனா கருவுற்றிருப்பதைப்போல தோன்றுவதாக கூறி வருகிறார்கள். மேலும் இந்த தம்பதி தங்களின் முதல் குழந்தை விரைவில் வரவேற்க உள்ளனர் என்றும் லண்டனில் குழந்தையை பெற்று எடுக்க உள்ளனர் என்றும் இணையத்தில் பரப்பி வருகிறார்கள். தற்போது கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன் காட்டிலும், பெரிய வயிறாக தெரிகிறது என கூறப்படுகிறது.  

View this post on Instagram
 
A post shared by Instant Bollywood (@instantbollywood)

கத்ரீனா கைஃப் தற்போது தன்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறார் என்பதால் அந்த செய்தியை பொதுவில் வெளிப்படுத்தாமல் தனிப்பட்ட முறையில் வைத்து கொள்ள விரும்புவதாகவும் கூறப்படுகிறது. உடல்நலம் மற்றும் மனநலம் மீது கவனம் செலுத்துவதற்காக அந்த தம்பதியினர் லண்டனில் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. 

அப்படி இந்த தகவல் உண்மையாக இருந்தால் கத்ரீனா கைஃப் நடிகை அனுஷ்கா சர்மாவின் வழியை பின்பற்றுவதாக தெரிகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடிகை அனுஷ்கா ஷர்மா தன்னுடைய இரண்டாவது குழந்தையை லண்டனில் பெற்றெடுத்தார். அது வரையில் தன்னுடைய கர்ப்பத்தை ரகசியமாக வைத்திருந்தார் அனுஷ்கா சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.  

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் முதல் குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர் என்ற தகவல் இணையத்தில் வெளியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!
Embed widget